மகனின் பிறந்தநாளை கொண்டாடிய டெல்லி போலீஸ்: நன்றி தெரிவித்த மேரிகோம்

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய டெல்லி போலீஸ்: நன்றி தெரிவித்த மேரிகோம்
மேரிகோம்
  • Share this:
ஊரடங்கு காலத்திலும் தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடி சிறப்பித்த டெல்லி போலீஸாருக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நன்றி தெரிவித்துள்ளார்.

6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனையும், மாநிலங்களவை உறுப்பினருமான மேரி கோமின் மகன், 7-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

இதையொட்டி, மேரி கோமின் இல்லத்துக்கு வந்த டெல்லி போலீஸார், கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினர்.

இதுதொடர்பான வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள மேரி கோம், ஊரடங்குக்கு மத்தியிலும் தனது மகனின் பிறந்த நாளை சிறப்புவாய்ந்ததாக டெல்லி போலீஸார் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். நீங்கள்தான் உண்மையான முன்னணி போராளிகள் என்று மேரி கோம் குறிப்பிட்டுள்ளார்.


Also see...
First published: May 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading