Home /News /sports /

உலக மகளிர் குத்துச்சண்டை: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மேரி கோம்!

உலக மகளிர் குத்துச்சண்டை: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மேரி கோம்!

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மேரிகோம்

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மேரிகோம்

Mary Kom One Step Away from Historic Sixth Gold | உலக சாம்பியன்ஷிப்பில் 5முறை தங்கம் வென்றுள்ள மேரிகோம், 6-வது முறையாக தங்கம் வென்று சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MaryKom #WorldBoxingChampionship

  • News18
  • Last Updated :
    உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    10-வது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான மேரி கோம், அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். அரையிறுதிச்சுற்றில், 35 வயதான மேரிகோம், வட கொரியாவைச் சேர்ந்த கிம் ஹையாங் மியை எதிர்கொண்டார்.

    Mary Kom
    பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மேரிகோம்


    போட்டியின் ஆரம்பம் முதலெ ஆக்ரோசமாக விளையாடிய மேரி கோம், வடகொரிய வீராங்கனைக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். மேரிகோமின் தாக்குதல் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கிம் ஹையாங் திணறினார். ஆட்டநேர முடிவில் 5-0 என கணக்கில் வெற்றி பெற்ற மேரிகோம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.



    உலக குத்துச்சண்டைப் போட்டியில் 5 தங்கம், 1 வெள்ளி என 6 பதக்கங்களை வென்றுள்ள அவர், தற்போது 7-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். கடைசியாக, 2010-ம் ஆண்டில் நடைபெற்ற உலக குத்துச்சண்டைப் போட்டியில் மேரிகோம் தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also See...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Mary Kom, World Boxing Championship

    அடுத்த செய்தி