Home /News /sports /

பதக்கத்தை உறுதி செய்தார் மேரிகோம்!

பதக்கத்தை உறுதி செய்தார் மேரிகோம்!

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மேரிகோம் (Twitter/AIBA)

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மேரிகோம் (Twitter/AIBA)

Mary Kom Assured of World Boxing Championships Bronze | காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் மேரிகோம், 5-0 என்ற கணக்கில் சீனாவைச் சேர்ந்த வுயூ-வை வீழ்த்தினார். #MaryKom

  • News18
  • Last Updated :
    மகளிர் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரிகோம் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    டெல்லியில் 10-வது மகளிர் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 48 கிலோ எடைப்பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான போட்டி ஒன்றில், ஐந்து முறை உலகச் சாம்பியனான இந்தியாவின் மேரிகோம், சீனாவைச் சேர்ந்த வுயூ உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

    Mary Kom, World Boxing
    களத்திற்குள் நுழையும் மேரிகோம் (Twitter/AIBA)


    35 வயதான மேரிகோம், போட்டியின் தொடக்கம் முதலே அபாரமாக ஆடினார். அவரின் ஆக்ரோசமான குத்துக்களை தாக்குப்பிடிக்க முடியாமல் சீனா வீராங்கனை திணறினார். தொடர்ந்து அடுத்தடுத்து செட்களைக் கைப்பற்றிய மேரிகோம், 30-27, 29-28, 30-27, 29-28, 30-27 என்ற புள்ளிகள் கணக்கில் 5-0 என அபார வெற்றி பெற்றார்.

    (Twitter/AIBA)


    மேரிகோம், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், குறைந்த பட்சம் வெண்கலப் பதக்கம் கிடைக்கும். எனவே, உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரிகோம், தனது 7-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதுவரை, மேரிகோம் இந்த தொடரில் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் அவர் தங்கம் வென்றிருந்தார்.

    (Twitter/AIBA)


    அரையிறுதிச்சுற்றில் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வடகொரியா வீராங்கனை கிம் ஹையாங் மி உடன் மேரிகோம் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

    Also See...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Mary Kom, World Boxing Championship

    அடுத்த செய்தி