முகப்பு /செய்தி /விளையாட்டு / குடியரசுத் தலைவரிடமிருந்து ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதைப் பெறுகிறார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு..

குடியரசுத் தலைவரிடமிருந்து ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதைப் பெறுகிறார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு..

மாரியப்பன் தங்கவேலு

மாரியப்பன் தங்கவேலு

ராஜீவ் காந்தி கேல்ரத்னா உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்குகிறார். பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்திலிருந்தபடி காணொளிக்காட்சி மூலம் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு விருதைப் பெறுகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய விளையாட்டு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவர் வழங்குவார். இந்த ஆண்டில் ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக 7 பிரிவுகளில் 74 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில், விருது வழங்கும் விழா இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக, வீரர், வீராங்கனைகளுக்கு காணொளிக்காட்சி மூலம் விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார்.

விருதுபெறும் வீரர், வீராங்கனைகள் இந்திய விளையாட்டு ஆணையத்தின் 9 மையங்களிலிருந்து விருதினைப் பெறுவார்கள். தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் உள்ளிட்டோர் பெங்களூரு மையத்திலிருந்து பங்கேற்பார்கள். ஆனால், ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றுள்ள ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோர் விழாவில் பங்கேற்க மாட்டார்கள். மேலும், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 14 பேர் விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Mariyappan Thangavelu, President Ramnath Govind, Rohit sharma