இந்திய பாராலிம்பிக் அணியின் கேப்டனாக மாரியப்பன் தேர்வு: இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் முதல் தமிழன்

மாரியப்பன்

டோக்கியோவில் நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக மாரியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியின் தொடக்க விழா அணி வகுப்பு நிகழ்ச்சியில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்சென்று இந்திய அணியை வழிநடத்துகிறார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன். ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்லும் முதல் தமிழன் என்ற சரித்திர சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் மாரியப்பன்.

ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5 வரை பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் களைகட்டவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 24 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். தமிழகத்திலிருந்து மாரியப்பன் உயரம் தாண்டுதல் பிரிவில் களமிறங்குகிறார். ஒலிம்பிக் வழக்கப்படி தொடக்க விழாவில் ஒவ்வொரு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் அணிவகுப்பில் பங்கேற்பர். அதன்படி அந்நாட்டின் கேப்டன் தேசிய கொடியை ஏந்தி செல்ல மற்ற வீரர்கள் அவரைப் பின்தொடர்ந்து அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டு பாராலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணியை தமிழகத்தைச்சேர்ந்த மாரியப்பன் வழிநடத்துகிறார். இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி இந்தியாவை வழிநடத்தும் முதல் தமிழன் என்ற பெருமையையும் உலக அரங்கில் பறைசாற்ற காத்திருக்கிறார் மாரியப்பன்.

கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீரர்கள் நடப்பு தொடரிலும் பங்கேற்கும் பட்சத்தில் அவர்களை தேர்வு செய்து கேப்டனாக அறிவித்து கௌரவித்து வருகிறது இந்திய விளையாட்டு அமைச்சகம். அதன்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து கேப்டனாகவும், டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு மாரியப்பன் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாரியப்பன் 2016ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை நிகழ்த்தினார். நடப்பு ஆண்டும் அதே பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Karthick S
First published: