ஐரோப்பிய கண்ட த்தில் கடந்த ஒருமாதமாக களைகட்டிய யூரோ கால்பந்து திருவிழாவில் இத்தாலி அணி மகுடம் சூடி சாதனை படைத்து.
இங்கிலாந்தின் கோட்டையான லண்டன் வேம்ளி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெனால்டி சூட் அவுட் மூலம் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக யூரோ கோப்பையை உச்சிமுகர்ந்தது இத்தாலி. எதிரியின் கோட்டையிலேயே அந்த அணியை வென்று சாம்பியன் பட்டத்தை முத்தமிட்ட இத்தாலியின் வெற்றியை உலகமே கொண்டாடி மகிழ்கிறது..
அதே வேளையில் 3-2 என்ற கோல்கல் கணக்கில் பெனால்டி சூட் அவுட்டில் போராடி வெற்றியை இழந்த இங்கிலாந்து அணியை அந்நாட்டு ரசிகர்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
அத்தோடி நின்றிருந்தால் விளையாடின் கன்னியம் காக்கப்பட்டிருக்கும். எல்லை கோட்டை கடந்த விமர்சன பார்வை பெனால்டி சூட் அவுட்-டில் கோல் அடிக்க தவறியவர்களின் நிறங்களை வைத்து இனவெறியை தூண்டும் விதமாக விமர்சனத்தை எழுப்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Bukayo Saka, Jadon Sancho, Marcus Rashford. ஆகிய மூவரும் கருப்பு நிறத்தில் இருப்பதை சுட்டிக்காடி சமூக வலைதளங்களில் அவர்கள் மீது நிறவெறி வன்மத்தை உமிழ்ந்து வருகின்றனர். இதை எதிர்த்து உலகமே ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என உலக சாம்பியன் ஃபிரான்ஸ் வீரர் பால் போக்பா போராட்ட குரல் எழுப்பியுள்ளார். அத்துடன் வீரர்களை உங்கள தலையை உயர்த்தி பெருமைபடுங்கள் இந்த நாட்டிற்காக பல்வேறு தியாகங்களை நீங்கள் செய்துள்ளீர்கள் உங்களை நினைத்து இந்த விளையாட்டு உலகம் பெருமைப்படுகிறது என அவர்களுக்கு ஆதரவு குரலையும் உரக்கச்சொல்லியுள்ளார்.
இத்தாலிக்கு எதிரான இறுதிப்போட்டியின் 71 வது நிமிடத்தில் Trippier க்கு மாற்று வீரராக Bukayo Saka களமிறக்கப்பட்டார். அதே போல் Jadon Sancho, Marcus Rashford இருவரும் கூடுதல் நேரத்தின் கடைசி நிமிட த்தில் பெனால்டி சூட் அவுட்டிற்காகவே களமிறக்கப்பட்டார்கள்.
Bukayo Saka : 19 வயதான Saka மேற்கு லண்டன் பகுதியில் உள்ள Ealing, நகரில் பிறந்தவர். தனது 15 வயதிலிருந்தே இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். 2017ம் ஆண்டு 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்து தனது திறமையை நிரூபித்து சீனியர் அணிக்கு தெர்வானார். நாட்டிற்காக Saka இதுவரை 9 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். நடப்பாண்டு ஆஸ்திரியாவிற்கு எதிராக நட்பு ரீதியிலான போட்டியில் இவரது கோல் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது குறிப்பிட த்தக்கது. கிளப் போட்டிகளில் அர்சனால் அணிக்காக விளையாடி வரும் Saka நடப்பாண்டின் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டவர்.
Marcus Rashford: 23 வயதான Rashford மேன்செஸ்டர் நகரில் பிறந்தவர். 2012ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் Rashford சர்வதேச அளவில் 46 போட்டிகளில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ளார். யூரோ தகுதிச்சுற்றுப் போட்டியில் இவரது கோல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. தன் தாய் நாட்டிற்காக பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். கிளப் போட்டிகளில் புகழ்பெற்ற மேன்செஸ்டர் அணியின் நட்சத்திர வீர ராக விளையாடி வருகிறார்.
Jadon Sancho: தெற்கு லண்டனில் உள்ள Camberwell, நகரில் பிறந்தவர் Sancho. 21 வயதான இவர் இங்கிலாந்து அணிக்காக 2015ம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் 22 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக களமாடியுள்ளார். இதில் மூன்று கோல்களையும் பதிவு செய்து இங்கிலாந்தின் வெற்றிக்கு உழைத்துள்ளார். இதே வேம்ளி மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக கோல் அடித்து இங்கிலாந்தை வெற்றிபெறவும் செய்திருக்கிறார். கிளப் போட்டிகளில் Dortmund அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர்களின் திறமையை அடையாளம் கண்ட இங்கிலாந்தின் பயிற்சியாளர் சௌத் கேட் வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி சூட் அவுட்டில் பயன்படுத்தினார். பெனால்டி சூட் அவுட் விதிமுறையின் படி போட்டியின் இறுதிநிமிடத்தில் களத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் இரு நாட்டு வீரர்கள் மட்டுமே பெனால்டி சூட் அவுட் முறையில் பங்கேற்க முடியும்.
இரு நாடுகளும் தங்கள் அணியில் உள்ள 11 வீரர்களிலிருந்து திறமையின் அடிப்படையில் ஐந்து வீரர்களை தேர்வு செய்து பெனால்டி சூட் அவுட் அடிக்க அனுப்ப வேண்டும் மற்ற வீர்ர்கள் மைதானத்தின் நடுவே உள்ள வட்ட த்தில் முடிவிற்காக காத்திருக்க வேண்டும்.
ஒருமுறை பெனால்டி சூட் அவுட் அடித்த வீரருக்கு இரண்டாவது வாய்ப்பு கிடையாது. ஒருவருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே.
கோல்கீப்பரை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம். அவரும் போட்டி தொடங்கும் போது கொடுக்கப்பட்ட அணி வீரர்களின் பட்டியலில் மாற்று வீரர் வரிசையில் இடம்பெற்றிருக்க வேண்டும். பெனால்டி சூட் அவுட்டின் போது கோல் கீப்பருக்கு காயம் ஏற்பட்டால் வீரர்களில் ஒருவர் கோல்கீப்பராக செயல்படவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டில் வெற்றி-தோல்வியை சமமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் இனவெறியை தூண்ட நிறத்தை கையில் எடுப்பது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதை உடனடியாக தடுத்த நிறுத்தியாக வேண்டும் அதுவரை ஆரோக்கியமான விளையாட்டு இவ்வுலகில் துளிர்விடப்போவதியில்லை என விளையாட்டை நேசிப்பவர்கள் கண்ணீர்விடுகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England, Euro Cup 2021, Football, Racism