ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு.. கால்பந்து மைதானத்துக்குள் வானவில் கொடியுடன் ஓடிய இளைஞர்!

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு.. கால்பந்து மைதானத்துக்குள் வானவில் கொடியுடன் ஓடிய இளைஞர்!

வானவில் கொடியுடன் மைதானத்தை வலம் வந்த இளைஞர்

வானவில் கொடியுடன் மைதானத்தை வலம் வந்த இளைஞர்

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து மைதானத்தில் வானவில் வர்ண கொடியை அனுமதிக்காதது போன்ற செயல்களை அந்நாடு செய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaQatarQatar

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு (குயர் சமூகத்தினர்) ஆதரவாக வானவில் கொடியை ஏந்தி மைதானத்திற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று போர்சுகல் உருகுவே அணிகள் களம் கண்டன. முதல் பாதியில் இருவரும் கோல் அடிக்காத நிலையில் 2ஆம் பாதியில் போர்சுகல் அணி கோல் அடித்து வெற்றியை கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தின் 51வது நிமிடத்தில், திடீரென ஒருவர், வானவில் கொடியை ஏந்திய வண்ணம் மைதானத்திற்குள் வலம்வந்தார். அவரது சட்டையில், “இராணிய பெண்களுக்கு மரியாதை” எனவும் “உக்ரைனை காற்றங்கள்” எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக கத்தார் நாடு, தன்பாலின ஈர்ப்பாளர்கள் எதிரான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உலக கோப்பை கால்பந்து மைதானத்தில் வானவில் வர்ண கொடியை அனுமதிக்காதது போன்ற செயல்களை செய்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்த இளைஞர் இவ்வாறு செய்துள்ளார்.

"ஒன்லவ்".. தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக ஜெர்மனி செய்த காரியம்.. கடுப்பான கத்தார்.. விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்.! 

இதற்கு முன்னர் “ஒன் லவ்” கைப்பட்டை சர்ச்சையான நிலையில் தற்போது மீண்டும் இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: FIFA World Cup 2022, LGBT