முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தடைவிதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தடைவிதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

இந்திய கிரிக்கெட் வாரியம்

இந்திய கிரிக்கெட் வாரியம்

உச்ச நீதிமன்றம் தனி குழுவை நியமித்து, பி.சி.சி.ஐ.,யை கண்காணிக்கும் நிலையில், உயர் நீதிமன்றத்தில் இணையான விசாரணை நடத்தும் வகையில் இந்த மனு தாக்கல் செய்துள்ளதாகவும், நீதிமன்ற நடவடிக்கையை தவறாக பயன்படுத்தும் வகையில் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறி, தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில், ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நிர்வகித்து வருகிறது.

ஆனால், மத்திய அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் இல்லாமல், சட்டவிரோதமாக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்கும் தனியார் அமைப்பான பி.சி.சி.ஐ., எனும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என, டெல்லியைச் சேர்ந்த கீதா ராணி என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தன் மனுவில், அரசு அமைப்பு என அறிவிக்க மறுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தன்னை இந்திய அணி எனக் கூறி இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த எந்த சட்டப்பூர்வ உரிமையும் கிடையாது எனவும், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் சின்னமாக பின்பற்றப்பட்ட நட்சத்திர சின்னத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பயன்படுத்துவது சின்னங்கள் சட்டத்திற்கு விரோதமான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய விளையாட்டு அமைப்பாக மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், கிரிக்கெட் அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மையை பின்பற்றுவதில்லை எனவும், எப்போதும் பாரபட்சமாகவே செயல்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றம் தனி குழுவை நியமித்து, பி.சி.சி.ஐ.,யை கண்காணிக்கும் நிலையில், உயர் நீதிமன்றத்தில் இணையான விசாரணை நடத்தும் வகையில் இந்த மனு தாக்கல் செய்துள்ளதாகவும், நீதிமன்ற நடவடிக்கையை தவறாக பயன்படுத்தும் வகையில் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பி.சி.சி.ஐ., நட்சத்திர சின்னத்தை வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தவில்லை என்பதால், அது சின்னங்கள் சட்டத்தின் கீழ் வராது எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இனிமேல் இதுபோன்ற மனுக்களை மனுதாரர் தாக்கல் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு அபராதம் விதிப்பதை தவிர்ப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:

ORANGE CAP:

PURPLE CAP:

RESULTS TABLE:

SCHEDULE TIME TABLE:

First published:

Tags: BCCI, Indian cricket team, Madras High court