• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Messi| கோபா அமெரிக்கா தங்க காலணி விருதை தட்டிச்சென்ற மெஸ்ஸி..

Messi| கோபா அமெரிக்கா தங்க காலணி விருதை தட்டிச்சென்ற மெஸ்ஸி..

மெஸ்ஸி

மெஸ்ஸி

கொலம்பிய வீரர் லூயிஸ் டயஸை பின்னுக்கு தள்ளி இந்த விருதை முதல் முறையாக கைப்பற்றியுள்ளார் மெஸ்ஸி..

  • Share this:
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரருக்கு வழங்கப்படும் தங்க காலணி விருதான சில்வர் பந்தை தட்டிச்சென்றார் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி..

கொலம்பிய வீரர் லூயிஸ் டயஸை பின்னுக்கு தள்ளி இந்த விருதை முதல் முறையாக கைப்பற்றி சாதனை நிகழ்த்தியுள்ளார் சாம்பியன் மெஸ்ஸி.. ஏழு போட்டிகளில் விளையாடிய மெஸ்ஸி நான்கு கோல்களை பதிவு செய்துள்ளார்.

Also Read:CopaAmerica2021| வெற்றிக்கொண்டாட்டத்தில் அர்ஜெண்டீனா.. கண்ணீர்விட்ட நெய்மார் - போட்டோ கேலரி

அத்துடன் ஐந்து முறை கோல் அடிக்கவும் பாஸ் செய்து உதவி செய்துள்ளார்.11 முறை கோல் கம்பத்தை நோக்கி கோல் அடிக்க முயற்சித்துள்ளார். அர்ஜெண்டினா அணிக்காக முதல் முறையாக கோப்பையை வென்று கொடுத்த மெஸ்ஸிக்கு, தங்க காலணி விருது வழங்கி சிறந்த வீரராக கவுரவித்துள்ளது.

Also Read: Lionel Messi: நெய்மருக்கு ஆறுதல் சொன்ன மெஸ்ஸி - வைரலாகும் வீடியோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிளப் கால்பந்து உலகில் பல தங்க காலணிகளை வென்ற மெஸ்ஸிக்கு கோபா அமெரிக்க தங்க காலணி விருதாக வழங்கப்படும் சில்வர் பந்து மட்டும் எட்டாக்கனியாகவே இருந்தது.
அந்த குறையை இந்த கோபா தொடரில் நிவர்த்தி செய்த மெஸ்ஸி, சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி தனது தனிப்பட்ட சாதனைக்கெல்லாம் மகுடம் சூட்டியிருக்கிறார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: