முகப்பு /செய்தி /விளையாட்டு / Lionel Messi: நெய்மருக்கு ஆறுதல் சொன்ன மெஸ்ஸி - வைரலாகும் வீடியோ

Lionel Messi: நெய்மருக்கு ஆறுதல் சொன்ன மெஸ்ஸி - வைரலாகும் வீடியோ

மெஸ்ஸி

மெஸ்ஸி

 பிரேசில்  கேப்டன் நெய்மார் மைதானத்தில் குலுங்கிக் குலுங்கி அழுதார்.

  • Last Updated :

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் சாம்பியன் பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜெண்டீனா 28 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் ஆனது. அர்ஜெண்டீனா வீரர் ஏஞ்செல் டி மரியா ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டீனா வெல்லும் முதல் பெரிய கோப்பையாகும் இது.

உலகம் முழுவதும் இருக்கும் மெஸ்ஸியின் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இணையத்தில் #Messi #GOAT என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. மெஸ்ஸி கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. அர்ஜெண்டீனா கேப்டன் மெஸ்ஸியை சக வீரர்கள் தூக்கி கொண்டாடும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அதேவேளையில் நெய்மருக்கு மெஸ்ஸி ஆறுதல் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேசில்  கேப்டன் நெய்மார் மைதானத்தில் குலுங்கிக் குலுங்கி அழுதார். நடுவர் இறுதிவிசில் அடித்ததும் மைதானத்தில் அர்ஜெண்டீனா வீரர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்திருந்தனர். பிரேசில் வீரர் நெய்மர் , மெஸ்ஸியை நோக்கி வந்தார். மெஸ்ஸி, நெய்மரை ஆரத்தழுவி அவருக்கு ஆறுதல் சொன்னார். அதேநேரத்தில் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருந்த தனது அணி வீரர்களில் முதுகில் தட்டிக்கொடுத்த மெஸ்ஸி. நெய்மரை ஆரத்தழுவி ஆறுதல் கூறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Argentina, Brazil, Football, Neymar jr