மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு - மெஸ்ஸிக்கு 2 ஆண்டுகள் தடை?

Lionel Messi Faces Up to 2 Years Ban | கத்தாரில் நடக்க இருக்கும் 2022 உலகக்கோப்பை தகுதிப்போட்டிகள், 2020-ம் ஆண்டு நடக்கும் கோபா அமெரிக்க தொடர் ஆகியவற்றில் அவரால் விளையாட முடியாமல் நிலை ஏற்படும்.

மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு - மெஸ்ஸிக்கு 2 ஆண்டுகள் தடை?
மெஸ்ஸி
  • News18
  • Last Updated: July 8, 2019, 3:26 PM IST
  • Share this:
கோபா அமெரிக்கா தொடரில் கால்பந்து கூட்டமைப்பு மீது மேட்ச்-பிக்ஸிங் குற்றச்சாட்டு கூறிய நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

வட - தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பான கோபா அமெரிக்கா, தொடரின் இறுதிப்போட்டியில் பெரு அணியை 3-1 என்ற கணக்கில் பிரேசில் அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா அணி, அரையிறுதியில் பிரேசில் அணியுடன் மோதி தோல்வி கண்டது. நட்சத்திர வீரர் மெஸ்ஸி அங்கம் வகிக்கும் அர்ஜெண்டினா அணி, உலகக்கோப்பை உள்ளிட்ட மிக முக்கியமான கோப்பைகளை வென்றதே இல்லை என்ற நிலை தற்போதும் தொடர்கிறது.


பிரேசில் உடனான ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்புகள் அர்ஜெண்டினாவுக்கு மறுக்கப்பட்டதை, போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் நேரடியாகவே மெஸ்ஸி குற்றம் சாட்டினார். கள நடுவர்கள் பாரபட்சம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மூன்றாம் இடத்திற்கான போட்டியில் அர்ஜெண்டினா 2-1 என்ற கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது. ஆட்டத்தில் சிலி அணி வீரருடன் ஏற்பட்ட மோதலை அடுத்து மெஸ்ஸிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ரெட் கார்டு பெற்று மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.போட்டிக்கு பின்னர் பேசிய மெஸ்ஸி, ரெட் கார்டு பெற்ற கோபத்தில் கால்பந்து கூட்டமைப்பு மீது சரமாரியான விமர்சனங்களை முன்வைத்தார். “பிரேசிலுக்கே இந்த கோப்பை என்று முன்பே திட்டமிடப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். வருத்தமளிக்கும் நிகழ்வாக ஊழல், நடுவர்கள் மற்றும் அவர்கள் நல்ல கால்பந்து போட்டியை பார்க்க வந்த மக்களை அனுமதிக்கவில்லை” என்று மெஸ்ஸி சாடினார்.

கால்பந்து அமைப்பு மீது மெஸ்ஸி வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. மெஸ்ஸியின் கருத்து ஏற்கக்கூடியது அல்ல என்று கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மெஸ்ஸி மீது விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் மட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளின் படி மெஸ்ஸி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவரால் 2 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது.

கத்தாரில் நடக்க இருக்கும் 2022 உலகக்கோப்பை தகுதிப்போட்டிகள், 2020-ம் ஆண்டு நடக்கும் கோபா அமெரிக்க தொடர் ஆகியவற்றில் அவரால் விளையாட முடியாமல் நிலை ஏற்படும்.

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை - நெதர்லாந்தை வீழ்த்தி அமெரிக்கா சாம்பியன் பட்டம் வென்றதுஆஸ்திரேலியாவுக்கு கங்குலி பேர கேட்கும் போதுதான் அல்லு அதிகமாக இருக்கும்...! வைரல் மீம்ஸ்


First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...