நாடு திரும்பினார் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா!

மலிங்கா

ICC World Cup 2019 | Lasith Malinga | இலங்கை அணி வரும் 15ம் தேதி ஆஸ்திரேலியா அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இலங்கை வேகப்பந்து வேச்சாளர் மலிங்கா அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி உள்ள இலங்கை அணி 1 வெற்றி, 1 தோல்வி அடைந்துள்ளது.  இரண்டு போட்டிகள் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

இலங்கை அணி வரும் 15-ம் தேதி ஆஸ்திரேலியா அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இலங்கை அணியின் நட்சத்திர வீரரான நுவான் பிரதிப் காயம் காரணமாக விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா அவரது மாமியார் கந்தி பெரா காலமானதால் அவசரமாக நாடு திரும்பியுள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்குவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

Also Watch

Published by:Vijay R
First published: