வாள்வீச்சு விளையாட்டின் அவலநிலை.. மைதானம், உபகரணங்கள் இல்லாமல் தவிக்கும் வீரர்கள்
வாள்வீச்சு விளையாட்டின் அவலநிலை.. மைதானம், உபகரணங்கள் இல்லாமல் தவிக்கும் வீரர்கள்
வாள்வீச்சு (மாதிரிப்படம்)
Fencing | தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் விளையாட்டுத்துறைக்கு நிதி ஒதுக்குகிறது. இவையெல்லாம் எதற்காக செலவிடப்படுகிறது என்ற கேள்வி வீரர்கள் மத்தியில் உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
வாள்வீச்சு விளையாட்டுப் போட்டிக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்ந்தாலும் அந்த விளையாட்டை கற்றுக்கொள்வதற்கான அடிப்படை வசதி கூட இங்கு இல்லை என்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பவானி தேவி.. டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய முதல் வீராங்கனை. இந்தியாவில் வாள்வீச்சு வீராங்கனை இருக்கிறார் என உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் பவானி தேவியை மட்டுமல்ல தமிழ்நாட்டையும் கொண்டாடித் தீர்த்தனர்.பணக்காரர்களால் மட்டுமே விளையாட முடியும் என்றிருந்த எழுதப்படாத விதியை நடுத்தர மக்களின் பிடித்தமான விளையாட்டாக மாற்றியிருக்கிறார் பவானி.
உலக அரங்கில் தமிழகத்தின் பெருமையை உயரே எடுத்துச்சென்ற இந்த வாள்வீச்சு விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை என்பது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் விளையாடுவதற்கான அடிப்படை உபகரணங்கள் ஏதுமில்லாமல் வீரர்கள் அவதியடைகின்றனர்.
மைதானம், அடிப்படை உபகரணங்கள், போதிய வசதிகள் இல்லை என்றாலும் பயிற்சியாளர் இல்லை என்பது இந்த விளையாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் விளையாட்டுத்துறைக்கு நிதி ஒதுக்குகிறது. இவையெல்லாம் எதற்காக செலவிடப்படுகிறது என்ற கேள்வி வீரர்கள் மத்தியில் உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களை மெருகேற்றி சர்வதேச போட்டியில் சாதிக்க துணையாக இருக்கும் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்கனவே உள்ள வீரர்களின் திறமையை ஊக்கப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனடியாக தமிழக அரசு தலையிட்டு இதற்கு தீர்வு கண்டால் மட்டுமே ஒலிம்பிக் களத்தில் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்ட முடியும்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.