LA LIGA BARCELONA PRESIDENTIAL RIVALS INSIST LIONEL MESSI IS WORTH IT SKV
4 ஆண்டுகளுக்கு மெஸ்ஸியின் ஊதியம் ரூ.4,906 கோடி? பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் தொடர்பான தகவல்
மெஸ்ஸி
2017ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு அந்த அணிக்காக விளையாடுவதற்காக, இந்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக ஸ்பெயினைச் சேர்ந்த நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விளையாட்டு உலகில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரபல நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியை, பார்சிலோனா அணி ரூ 4,906 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு அந்த அணிக்காக விளையாடுவதற்காக, இந்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக ஸ்பெயினைச் சேர்ந்த நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு ஆண்டிற்கான மெஸ்ஸியின் ஊதியம், 1, 217 கோடி ரூபாய் ஆகும். இந்த ஒப்பந்த கால கட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பட்டங்களை, பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி வென்று தந்துள்ளார்.
இதனிடையே, இந்த ஒப்பந்த விவரங்களை ஏற்கவோ, மறுக்கவோ செய்யாத பார்சிலோனா நிர்வாகம், தகவலை வெளியிட்ட நாளேடு மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.