இந்திய அணியின் விராத் கோலி இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் மக்களால் பின்தொடரப்படும் முதல் இந்தியர் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனான் விராத் கோலி களத்தில் மட்டுமல்லாது, களத்திற்கு வெளியேயும் தற்போது பல சாதனைகளைப் படைக்கத் தொடங்கியிருக்கிறார். பொதுவாகவே கோலி நாடறிந்த பிரபலம் என்பதால் அவரை சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான அவரது ரசிகர்களும், கிரிக்கெட் விமர்களும், சக கிரிக்கெட் விரர்களும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
அவரும், தனது சமூக வலைதளப்பக்கதில், போட்டிகள் குறித்த தனது கருத்துகளையும், புகைப்படங்களையும், தான் பயிற்சி செய்யும் வீடியோ கட்சிகளையும் பதிவிடுவது மட்டுமல்லாமல் தனது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவுடன் தான் சுற்றுலா செல்லும்போது எடுக்கும் படங்களையும் பதிவிடுவது வழக்கம். அந்தப் போட்டோக்கள் டிரெண்ட் ஆக தவறியதில்லை.
இந்நிலையில் இவற்றில் ஒரு புதிய மைல்கல்லாக இன்ஸ்டாகிராமில் தற்போது கோலியை பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை 50 மில்லியனை(5 கோடி) எட்டியுள்ளது. இந்தப் பெருமையை பெரும் முதல் இந்தியராகிறார் கோலி.
இவருக்கு அடுத்த இடத்தில் இந்தியர்கள் என்ற முறையில் நடிகை பிரியங்கா சோப்ரா 49 மில்லியன் ரசிகர்களோடு இரண்டாமிடத்திலும், தீபிகா படுகோனே 44 மில்லியன் ரசிகர்களோடு மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 34.5 மில்லியன் என்ற எண்ணிக்கையைக் கொண்டு எட்டாம் இடத்தில் உள்ளார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.