ஹெலிகாப்டர் விபத்தில் அமெரிக்க பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரியண்ட் தனது மகளுடன் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரியண்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் தனது 13 வயது மகளுடன் உயிரிழந்துள்ளார். அவரது ரசிகர்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோப் பிரியண்ட் போட்டி ஒன்றில் விளையாடி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மகளுடன் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் தீப்பிடித்து ஏற்பட்ட விபத்தில் இருவரும் பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.