முகப்பு /செய்தி /விளையாட்டு / Exclusive | 2021 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் - கேல் ரத்னா விருது பெறும் மாரியப்பன் தங்கவேல் உறுதி

Exclusive | 2021 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் - கேல் ரத்னா விருது பெறும் மாரியப்பன் தங்கவேல் உறுதி

மாரியப்பன் தங்கவேலு

மாரியப்பன் தங்கவேலு

டோக்கியோவில் 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வேன் என்று கேல் ரத்னா விருது பெறவுள்ள தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடப்பாண்டிற்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்ய சேவாக், சர்தார் சிங், தமிழக முன்னாள் குத்துச்சண்ட வீரர் தேவராஜ் உள்ளிட்ட 12பேர் அடங்கிய குழு ஆலோசித்தனர்.  இதில், நாட்டின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தமிழக பாராலிம்பிக் தடகள வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 பாராலிம்பிக் தடகள போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ஏற்கனவே அர்ஜூனா விருது, பத்ம ஸ்ரீ விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது விளையாட்டு துறையின் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கும் மாரியப்பன் தேர்வாகியுள்ளார்.

ALSO READ |  ”2011 உலகக்கோப்பையில் உங்களின் ஊக்கம் மிகுந்த பங்கை மறக்கமுடியாது” - சுரேஷ் ரெய்னா பகிர்ந்த பிரதமரின் கடிதம்

அர்ஜூனா விருது, கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, தடகள வீராங்கனை டுட்டி சந்த் உள்ளிட்ட 29 வீரர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆன்லைன் மூலம் கவுரவிக்கப்படவுள்ளனர்.

இதுதொடர்பாக நியூஸ்18னுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் டோக்கிய ஒலிம்பிக் போட்டிக்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் கண்டிப்பாக தங்கம் வெல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், என்னைப் போன்ற தடகள வீரர்களுக்கு முறையான பயிற்சியும் ஊக்கமும் அளித்தால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Mariyappan Thangavelu, Rohit sharma