முகப்பு /செய்தி /விளையாட்டு / அஸ்வின், மிதாலி ராஜூக்கு கேல் ரத்னா விருது வழங்க பி.சி.சி.ஐ பரிந்துரை

அஸ்வின், மிதாலி ராஜூக்கு கேல் ரத்னா விருது வழங்க பி.சி.சி.ஐ பரிந்துரை

அஸ்வின் மிதாலி ராஜ்

அஸ்வின் மிதாலி ராஜ்

கேல்ரத்னா விருதுக்கு தமிழக வீரர் அஸ்வின், மிதாலி ராஜ் உள்ளிட்டவர்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆண்டு தோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதாகும்.

பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்குபவர்களின் பெயர்கள் மேற்கூறிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், 2021-ம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜூக்கும் கேல் ரத்னா விருது வழங்கவேண்டும் என்று பி.சி.சி.ஐ பரிந்துரைத்துள்ளது. அதேபோல, கே.எல்.ராகுல், ஜஸ்ப்ரித் பும்ரா, ஷிகர் தவான் ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்கவேண்டும் என்றும் பி.சி.சி.ஐ பரிந்துரைத்துள்ளது.

First published:

Tags: Mithali Raj, R Ashwin