Home /News /sports /

தினமும் 10 கிமீ ஓடியே பணியிலிருந்து வீடு வந்து சேரும் நொய்டா நபர்- கெவின் பீட்டர்சன் ஆச்சரியம்

தினமும் 10 கிமீ ஓடியே பணியிலிருந்து வீடு வந்து சேரும் நொய்டா நபர்- கெவின் பீட்டர்சன் ஆச்சரியம்

கெவின் பீட்டர்சன்

கெவின் பீட்டர்சன்

உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா (19). இவர் தன்னுடைய வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பணி முடிந்து வீடு திரும்பும் போது வாகனம் எதையும் பயன்படுத்தாமல் ஓடியே வீடு வந்து சேர்கிறார், இது வைரல் வீடியாவாக வலம் வர இங்கிலாந்து முன்னாள் அதிரடி வீரர் சுவிட்ச் ஹிட் புகழ் கெவின் பீட்டர்சன் ஆச்சரியத்துடன் பாராட்டித் தள்ளியுள்ளார்.

தினமும் 10 கிலோமீட்டர் ஓடி வீட்டிற்கு செல்லும் இளைஞரின் வீடியோ சமீபத்தில் வைரலானது. மற்றவர்களை போன்று வாகனம், பேருந்து வசதிகளை பிரதீப் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக, பணி முடிந்ததும் இரவில், நொய்டா சாலையில் 10 கி.மீ. தூரம் ஓடியே வீட்டை அடைகிறார். இதை அவர் ஒரு பயிற்சியாகவே செய்து வருகிறார். காலையில் பயிற்சி செய்வதற்கு நேரம் இல்லாததால் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் நேரத்தை ஒரு பயிற்சி ஓட்டமாகவே தினமும் செய்து வருவது நெட்டிசன்கள் மத்தியில் பேரார்வத்தையும் பாராட்டு மழையையும் ஈர்த்தது.

ராணுவத்தில் சேர்வதற்காக தான் ஓடுவதாகவும் காலையில் தினமும் 8 மணிக்கு எழுந்து, பணிக்கு செல்வதற்கு முன் உணவு சமைக்க வேண்டும் என்பதால் காலையில் தன்னால் பயிற்சி மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

10 கிலோமீட்டர் இவர் ஓடி செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வைரலானது. இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதீப் மெஹ்ரா ஓடும் வீடியோவை பகிர்ந்து "இன்றைய காலை பொழுதை இது சிறப்பாகியுள்ளது ! என்ன ஒரு மனிதர் !" என பதிவிட்டுள்ளார். கெவின் பீட்டர்சன் பதிவும் வீடியோவும் இதோ:



கெவின் பீட்டர்சனின் இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. என்னென்னவோ பயிற்சி என்றும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு சென்று காசு பணத்தை கொட்டி அழுது நவீன பயிற்சிகளை செய்து கை கால் பிடித்துக் கொள்வதை விட தினமும் இப்படி ஓடினால் எந்த ஒரு பிரச்சனையும் அண்டாது, நோயும் நம்மை அண்ட பயப்படும்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் இதைத்தான் பரிந்துரைக்கிறார், அவர் இந்தக் காலத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜிம்மில் போய் உயிரை விட்டு பயிற்சி செய்வதைக் கண்டு வருந்தி, தான் தினமும் லாகூர் மைதானத்தை 10 முறை ஓடி சுற்றி வருவேன் என்று கூறினார். ஆகவே ஓட்டம், நீச்சல் போன்று ஒரு அதியற்புத பயிற்சி என்பது இப்போது இந்த இளைஞராலும் ஒருமுறை நமக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
Published by:Muthukumar
First published:

Tags: Cricket, Sports

அடுத்த செய்தி