ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் - ஜூவாலா கட்டா

ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் - ஜூவாலா கட்டா

ஜூவாலா கட்டா

ஜூவாலா கட்டா

ஜே.என்.யு. பல்கலைகழக மாணவர்கள் மீதான தாக்குதலை கட்சி பாகுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என இந்திய பேட்மிண்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஜே.என்.யூ பல்கலைகழக மாணவர்கள் மீதானத் தாக்குதலை கட்சி பாகுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இளம் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக தனியார் நிறுவனமான காசாகிராண்ட் 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தது.

இந்நிகழ்ச்சியில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஜூவாலா கட்டா கலந்துகொண்டு வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். சென்னையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ருத்திகா, கோவையைச் சேர்ந்த ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை அபிநயா மற்றும் பெங்களூருவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சுகிதா ஆகியோருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய ஜூவாலா கட்டா, ‘இந்தியாவில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நம்மை விட சின்னஞ்சிறிய நாடுகள் ஒலிம்பிக்கில் நிறைய பதக்கங்களைக் கைப்பற்றுகிறது. ஆனால் நாம் ஒன்று, இரண்டு பதக்கங்களை வென்று கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அத்துடன் கார்பரேட் நிறுவனங்கள் விளையாட்டிற்கு முக்கியத்தும் கொடுத்து உதவுவதில்லை. அவர்கள் முன்வந்தால் எண்ணற்ற சாம்பியன்கள் உருவாவார்கள். விளையாட்டை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்ககூடாது. விளையாட்டு நம் வாழ்வின் ஒரு அங்கம். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் விளையாட்டில் இரட்டையரில் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்கள் இல்லை. ஒற்றையர் பிரிவில் சிந்து, சாய்னா ஆகியோர்கள் மூலம் ஒரு பதக்கம் நிச்சயம் வெல்ல முடியும். ஜே.என்.யூ மாணவர்கள் தாக்குதலைக் கட்சிப் பாகுபாடின்றி நாம் அனைவரும் மாணவர்கள் பக்கம் நின்று இதுபோன்ற செயல்களை எதிர்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: