கொரோனாவிற்கு நிதி திரட்ட ஜெர்சியை ஏலத்தில் விடும் இங்கிலாந்து வீரர்!

கொரோனாவிற்கு நிதி திரட்ட ஜெர்சியை ஏலத்தில் விடும் இங்கிலாந்து வீரர்!
ஜோஸ் பட்லர்.
  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தான் அணிந்த ஜெர்சியை ஏலத்தில் விட முடிவெடுத்துள்ளார் பட்லர்.

ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் கொரோனா வைரஸ் உலுக்கி அச்சுறுத்தி வரும் வேளையில் விளையாட்டு முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் தன்னையும் இணைத்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்.

அண்மையில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாம்பியன் ஆனது. இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தான் அணிந்து விளையாடிய ஜெர்சியை ஏலத்தில் விடப்போவதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.


ராயல் ப்ராம்ப்டன் மற்றும் ஹேர்ஃபீல்ட் மருத்துவமனை தொண்டு நிறுவனங்களுக்கான நிதி திரட்டுவதற்காக தனது ஜெர்சியை ஏலம் விடப் போவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உயிர் காக்கும் கருவிகளை வழங்கவுள்ளதாகவும், தன்னுடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் எனவும் பட்லர் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ள பட்லர், அனைவரும் பாதுகாப்பாக, வீட்டில் இருக்க வேண்டும் எனவும், மருத்துவர்கள், செவிலியர்கள் என ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் அளப்பரிய கடமையை ஆற்றி வருவதாகவும் பதிவிட்ட பட்லர், அவர்களுக்கு உதவும் விதமாக இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட தன்னுடைய ஜெர்சியை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

உலகக்கோப்பை வென்ற தருணத்தையும் சேர்த்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பட்லர், அனைவரும் அவரவர்களால் முடிந்த அளவு நிதி திரட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.Also see...
First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading