அனுபமா பரமேஸ்வரனுடன் கிசுகிசுக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ராவுக்கு டிவி தொகுப்பாளினியுடன் திருமணம்?

அனுபமா பரமேஸ்வரனுடன் கிசுகிசுக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ராவுக்கு டிவி தொகுப்பாளினியுடன் திருமணம்?

அனுபமா - பும்ரா

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தாயாரே இந்த தகவலை மறுத்து இது வெறும் வதந்தி தான் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவருடன் பும்ராவுக்கு திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Share this:
கேரளாவைச் சேர்ந்த பிரபல தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரனுடன் திருமணம் என கிசுகிசுக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு விளையாட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஒருவருடன் அடுத்த வாரம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களாகவே இணையத்தை கலக்கிய கிசுகிசு என்றால் அது ஜம்பிரித் பும்ரா - நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் என்பதாகத் தான் இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் விடுப்பு எடுத்துச் சென்ற பிறகு தான் இந்த தகவல் பூதாகரமாக கிளம்பியது. நடிகை அனுபமா பரவேஸ்வரன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் பின் தொடர்வதில் தொடங்கி, நடிகை அனுபமா ராஜ்கோட்டுக்கு சென்ற வரை பல தகவல்களையும் ஒரு சேர இணைத்து இந்த கிசு கிசுவுக்கு வலுவூட்டினர்.

இறுதியாக நடிகை அனுபமா பரமேஸ்வரனின் தாயாரே இந்த தகவலை மறுத்து இது வெறும் வதந்தி தான் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவருடன் பும்ராவுக்கு திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல்கள் உண்மையென்றால் 2014ம் ஆண்டின் மிஸ் இந்தியா இறுதி போட்டியாளரும், விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவருமான சஞ்சனா கனேசனை ஜஸ்பிரித் பும்ரா திருமணம் முடிக்க இருக்கிறார் என்பதை நம்பித் தான் ஆகவேண்டியுள்ளது.

இவர்கள் இருவரின் திருமணம் கோவாவில் உள்ள தனியார் ரிசார்டில் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் நடக்கும் என கூறப்படுகிறது. மேலும் திருமணத்திற்காக பும்ராவின் தாயாரும், சகோதரியும் மும்பைக்கு பயணமாகி உள்ளதாகவும். கொரோனா நெறிமுறைகள் காரணமாக பும்ராவின் திருமணத்தில் மிகவும் நெருக்கமான சில குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியான நிலையில் சமூக வலைத்தளங்களில் பும்ராவுக்கு திருமண வாழ்த்தை இப்போதே தெரிவித்து வருகின்றனர்.

டெஸ்ட் தொடருக்கு பின்னர் நடைபெறவிருக்கும் டி20 தொடரிலும் பும்ரா பங்கேற்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: