Home » News » Sports » JASPRIT BUMRAH MOHAMMED SIRAJ FACE RACIAL ABUSE AT SYDNEY GROUND ARU

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜை இனவெறியுடன் ரசிகர்கள் இழிவுபடுத்தியதாக புகார்!

சிட்னி மைதானத்தில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இனரீதியாக இழிபடுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜை இனவெறியுடன் ரசிகர்கள் இழிவுபடுத்தியதாக புகார்!
சிட்னி மைதானத்தில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இனரீதியாக இழிபடுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
  • Share this:
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியின் 3வது நாளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சிராஜ் இருவரையும் ரசிகர்கள் இனவெறி ரீதியில் இழிவுபடுத்தியதாக இந்திய அணி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி டெஸ்ட் என்றதும் இனவெறி சர்ச்சை தான் ஞாபகத்திற்கு வரும், 2008ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் - ஆஸி வீரர் சைமண்ட்ஸ் இடையிலான வார்த்தை போர் இனவெறியாக மாறியது நினைவிருக்கலாம். 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே சிட்னி மைதானத்தில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது டெஸ்ட் கிரிக்கெட்
போட்டியின் போது மீண்டும் ஒரு இனவெறி சர்ச்சை அரங்கேறியிருக்கிறது.




ஆஸ்திரேலியா சென்று டி20, ஒரு நாள் தொடர்களில் விளையாடிய
இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்றுவருகிறது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இரு
அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று
வரும் நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ்
மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மைதானத்தில்
ரசிகர்களால் இனவெறி ரீதியாக இழிவுபடுத்தப்பட்டதாக
கூறப்படுகிறது.

இனவெறி சர்ச்சை தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி
நிர்வாகத்தினர் போட்டி நடுவர் டேவிட் பூனிடம் புகார்
அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இருவரும் 2வது
மற்றும் 3வது நாளில் ரசிகர்களால் இனவெறி ரீதியில்
இழிவுபடுத்தப்பட்டதாக தெரியவந்ததையடுத்து கேப்டன்
அஜிங்கியா ரகானே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் கள நடுவர்களான பால் ரெய்ஃபல் மற்றும் பால் வில்சன் ஆகிய இருவரிடமும் ஆட்டத்தின் இறுதி நேரத்தில் இது தொடர்பாக பேசியதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தரப்பிலிருந்து ஐசிசி பாதுகாப்பு குழுவினரிடமும் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 9, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading