உள்ளாடை குறித்த கேலிக்கு பும்ரா பதிலடி!

உள்ளாடை குறித்த கேலிக்கு பும்ரா பதிலடி!
விராத் கோலியுடன் பும்ரா
  • News18
  • Last Updated: August 25, 2019, 7:14 PM IST
  • Share this:
சமூகவலைதளத்தில் தான் பதிவிட்ட புகைப்படத்தை பலரும் கேலி செய்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பும்ரா.

உலகின் நம்பர் 1 பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. அதிவேகமாக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் உடனான டெஸ்ட் போட்டியின் போது பும்ரா படைத்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்னதாக விராட் கோலி மற்றும் கிரிக்கெட் அணியினர் பலரும் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.


பும்ரா, கோலி உள்ளிட்ட அணியின் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் படங்களை வெளியிட்டிருந்தனர்.

இவற்றில் கோலியுடனான பும்ராவின் புகைப்படம் சிலரின் கவனத்தை ஈர்த்தது. காரணம், பும்ரா அணிந்திருந்த பாக்ஸர் பிராண்ட் உள்ளாடையை மீறி உடல் தெரிந்ததாக சமூக வலைதளத்தில் அவரை கேலி செய்தனர். மேலும் சில விஷமமான விமர்சனங்களையும் சந்திக்க நேர்ந்தது.

இதற்கெல்லாம் அசராத பும்ரா தனக்கு எதிராக கேலி செய்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், வேடிக்கையான ஓர் உண்மை, ஒளி நிழல்களைப் புரிந்து கொள்வது இந்நாட்களில் பலருக்கு எளிதல்ல. மக்கள் இதிலிருந்து விரைவில் மீள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். 
View this post on Instagram
 

Sun soaking with @virat.kohli and the team 🌊🌊


A post shared by jasprit bumrah (@jaspritb1) on


வீடியோ பார்க்க: லைக்குகளை குவிக்கும் ரீல் ஹீரோ, ஹீரோயின்ஸ்...

First published: August 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading