முகப்பு /செய்தி /விளையாட்டு / ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் : நட்சத்திர வீராங்கனை சிந்து, சாய் பிரணீத் காலிறுதிக்கு தகுதி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் : நட்சத்திர வீராங்கனை சிந்து, சாய் பிரணீத் காலிறுதிக்கு தகுதி

பி.வி.சிந்து

பி.வி.சிந்து

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சாய் பிரணீத் காலிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

ஜப்பானில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து - ஜப்பானின் ஓஹோரியை எதிர்கொண்டார். முதல் சுற்றை 21-11 என்ற கணக்கில் சிந்து கைப்பற்றினார். இரண்டாவது சுற்றில் சுதாரித்து கொண்ட ஒஹோரி 21-10 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார்.

வெற்றியை தீர்மானிக்கும் இறுதி சுற்றில் ஆக்ரோஷமாக விளையாடிய சிந்து 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரணீத், ஜப்பானின் கன்டாவை எதிர்கொண்டார். முழு திறனையும் வெளிப்படுத்திய சாய் பிரணீத் 21-13, 21-16 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Also Watch

First published:

Tags: PV Sindhu