ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: மும்பைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜம்ஷெட்பூர்

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: மும்பைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜம்ஷெட்பூர்

கோல் அடித்த மகிழ்ச்சியில் ஜாம்ஷெட்பூர் அணியினர்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் ஜாம்ஷெட்பூர் அணியினர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை அணியை வீழ்த்தி, ஜம்ஷெட்பூர் அணி முதல் போட்டியிலேயே வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது.

  ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 4-வது லீக் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில், உள்ளூர் அணியான மும்பை, ஜம்ஷெட்பூர் அணியுடன் மோதியது. ஆரம்பம் முதலே ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். இதன் பயனாக, 28-வது நிமிடத்தில் அந்த அணியின் கார்லஸ் கார்னர் பகுதியில் இருந்து தூக்கி உதைத்த பந்தை, சக வீரர் மரியோ ஆர்க்யூஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார்.

  இதையடுத்து, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை வீரர்களும் வேகம் காட்டினர். ஆனால், அவர்களின் முயற்சிகளை ஜம்ஷெட்பூர் வீரர்கள் முறியடித்தனர். எனினும், 76 மற்றும் 83-வது நிமிடங்களில் மும்பை வீரர்கள் கோல் அடித்தனர். ஆனால், அவற்றை நடுவர், ஆஃப்சைடு கொடுத்ததால் மும்பை வீரர்கள் சோர்வடைந்தனர்.

  ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மும்பையின் தற்காப்பு அரணை கடந்து சென்ற ஜம்ஷெட்பூர் வீரர் பாப்லோ கோல் அடித்தார். முடிவில், 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி, முதல் ஆட்டத்திலேயே ஜம்ஷெட்பூர் வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் புனே - டெல்லி அணிகள் மோதவுள்ளன.

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: ISL Football League, ISL Games, ISL winners, Mumbai Vs Jamshedpur