Home /News /sports /

VIDEO: மைதானத்துக்குள் ஹெலிகாப்டரை இறக்கி துப்பாக்கி முனையில் கால்பந்து வீரர் கடத்தல்!

VIDEO: மைதானத்துக்குள் ஹெலிகாப்டரை இறக்கி துப்பாக்கி முனையில் கால்பந்து வீரர் கடத்தல்!

இத்தாலி கால்பந்து வீரர் கடத்தல்.

இத்தாலி கால்பந்து வீரர் கடத்தல்.

Italian Footballer’s Retirement Match Stopped by ‘Helicopter Kidnapping' | இத்தாலியில் கால்பந்து வீரர் ஒருவரின் கடைசி போட்டி மறக்க முடியாத தருணமாக அமைந்துவிட்டது.

  • News18
  • Last Updated :
    இத்தாலியில் மைதானத்துக்குள் ஹெலிகாப்டரை தரையிறக்கி துப்பாக்கி முனையில் கால்பந்து வீரர் கடத்தப்பட்டதாக பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

    சர்வதேச விளையாட்டு அரங்கில் பிரபலமான வீரர் தனது கடைசி போட்டியை சொந்த மைதானத்தில் விளையாடி ஓய்வு பெறுவது மறக்க முடியாத தருணமாக அமையும். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி போட்டியில் மும்பையில் விளையாடி அரைசதம் அடித்து ஓய்வு பெற்றதை மறக்க முடியுமா?

    அதேபோல், பிரபல கால்பந்து வீரர் ஸிடேன், ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கூடுதல் நேரத்தில் தலையால் முட்டி கோல் அடித்ததை எளிதில் மறக்க முடியாது.

    Footballer Helicopter Kidnapping 2
    இத்தாலி உள்ளூர் கால்பந்து போட்டி.


    அதேபோல், இத்தாலியில் கால்பந்து வீரர் ஒருவரின் கடைசி போட்டி மறக்க முடியாத தருணமாக அமைந்துவிட்டது. உள்ளூர் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமான வீரர் இக்னேஸியோ பார்பகால்லோ (55). இவர் தனது கடைசி போட்டியை சொந்த மைதானத்தில் விளையாடத் தொடங்கினார்.

    சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று புழுதியைக் கிளம்பிக்கொண்டு நடு மைதானத்தில் தரையிறங்கியது. அதில் இருந்து வெளியே வந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் இக்னேஸியோவை கடத்திச் சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.



    பின்னர்தான் தெரிந்தது இது சும்மா ஜாலிக்காக எடுக்கப்பட்ட பிராங் வீடியோ. இதனை அறிந்த போட்டி நிர்வாகம், அவரது அணியை இடைநீக்கம் செய்ததோடு, அபராதமும் விதித்தது. உண்மையிலேயே அந்த போட்டி மறக்க முடியாத தருணமாக மாறிவிட்டது.

    VIDEO: மிதாலிக்கு பந்துவீசிய ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன்!

    இதெல்லாம் ஒரு பிட்ச்சா? டெல்லி ஆடுகளத்தை விளாசிய பாண்டிங்!

    ஃபோட்டோவை கிழித்த ஆண்டர்சன்... பதிலடி கொடுத்த அஸ்வின்!

    இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தடைவிதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

    Also Watch...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Murugesan L
    First published:

    Tags: Football

    அடுத்த செய்தி