Home /News /sports /

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இளவேனில் தங்கம் வென்று அசத்தல்!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இளவேனில் தங்கம் வென்று அசத்தல்!

இளவேனில் வாலறிவன்

இளவேனில் வாலறிவன்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் மற்றும் மனு பாக்கர் தங்கம் வென்று அசத்தினர். இன்று ஒரே நாளில் இந்தியாவிற்கு இரண்டு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சீனாவின் புதியான் (Putian) நகரில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான 10 மீட்டர் ஜூனியர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற மனு பாக்கர் தங்கம் வென்று அசத்தினார்.

இந்த போட்டியில் 244. 7 புள்ளிகளை பெற்று இளையோர் பிரிவில் உலக அளவில் புதிய சாதனையும் படைத்தார். அத்துடன் இந்த வெற்றியின் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் மனு பாக்கர் பெற்றார்.

மற்றொரு போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் பங்கேற்ற அவர் 250 .8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

 
Published by:Vijay R
First published:

Tags: Elavenil

அடுத்த செய்தி