“ரசிகர்கள் இல்லாமல் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் இறுதிப் போட்டி“ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இறுதிப்போட்டி என்பதால் மைதானத்திற்கு 30 முதல் 40 ஆயிரம் ரசிகர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ரசிகர்கள் இல்லாமல் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் இறுதிப் போட்டி“ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ISL
  • Share this:
கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோவாவில் வரும் 14 ம் தேதி நடைபெற உள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என ஐ.எஸ்.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவாவில் உள்ள நேரு விளையாட்டரங்கில் 6-வது ஐ.எஸ்.எல் தொடரின் இறுதிப்போட்டி வரும் சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னையின் எஃப்சி அணியும், அட்லெடிகோ கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இறுதிப்போட்டி என்பதால் மைதானத்திற்கு 30 முதல் 40 ஆயிரம் ரசிகர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் நாடு முழுவதையும் அச்சுறுத்திவரக்கூடிய இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும், வீரர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


ரசிகர்கள் வீட்டில் இருந்தப்படியே ஐ.எஸ்.எல் இறுதிப்போட்டியை டிவியில் கண்டுகளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்தாலி, சிரியா, ஈரான் போன்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெறுகின்றன. அத்துடன் முதல் முறையாக இந்தியாவில் இதுபோன்று போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
First published: March 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading