Home /News /sports /

#ISLFinal: இன்று இறுதிப்போட்டி.. புதிய சாம்பியன் யார்?

#ISLFinal: இன்று இறுதிப்போட்டி.. புதிய சாம்பியன் யார்?

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர். (ISL)

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர். (ISL)

#ISLFinal: A new champion will be crowned as #FCGoa battle #BengaluruFC | இரு அணிகளும் ஒரு முதல் முறையாக கோப்பை வெல்ல கடுமையாக முயற்சிக்கும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் இன்று நடைபெற உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 5-வது சீசன் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கியது. இடைப்பட்ட காலத்தில் ஆசிய கோப்பை கால்பந்து தொடரும் நடைபெற்றதால் தொடர் 5 மாதங்களாக நடைபெற்ற வந்தது.

Mumbai City FC,
ஐ.எஸ்.எல்: மும்பை - பெங்களூரு ஆட்டம். (ISL)


லீக் சுற்று முடிவில் பெங்களூரு எப்.சி , எப்.சி கோவா, மும்பை சிட்டி எப்.சி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி ஆகிய 4 அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி உள்ளிட்ட மற்ற அணிகள் அரையிறுதிச் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின.

அரையிறுதியில் வெற்றி பெற்ற பெங்களூரு எப்.சி - எப்.சி கோவா அணிகள் மகுடம் யாருக்கு என நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.

Bengaluru FC, பெங்களூரு எப்.சி
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் பெங்களூரு எப்.சி வீரர்கள். (ISL)


கடந்த சீசனில் 2-வது இடம் பெற்ற பெங்களூரு அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதேபோல் 2015-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கோவா அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

இரு அணிகளும் ஒரு முதல் முறையாக கோப்பை வெல்ல கடுமையாக முயற்சிக்கும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Watch...

Published by:Murugesan L
First published:

Tags: ISL football

அடுத்த செய்தி