ISL 2018: டிராவில் முடிந்தது பெங்களூரு - ஜாம்ஷெட்பூர் ஆட்டம்

news18
Updated: October 8, 2018, 8:27 AM IST
ISL 2018: டிராவில் முடிந்தது பெங்களூரு - ஜாம்ஷெட்பூர் ஆட்டம்
ஜாம்ஷெட்பூர் அணியினர்
news18
Updated: October 8, 2018, 8:27 AM IST
பெங்களூரு - ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையேயான ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் ஹம்மோன்ஜித் எதிர் அணியின் சிடான்ஜாவை பவுல் செய்தார். இதன் மூலம் கிடைத்த ப்ரீகிக் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து 81- வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கவுரவ் கோல் அடித்து கணக்கை தொடங்கி வைத்தார். ஆனால், சில நிமிடங்களிலேயே பெங்களூரு அணி கேப்டன் செத்ரி, ஒரு கோல் அடித்தார். அடுத்து பெங்களூரு அணி மீண்டும் ஒரு கோல் அடித்து வெற்றி நோக்கி பயணித்தது. இந்நிலையில், கடைசி நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் செர்ஜியோ கோல் போட்டு 2 - 2 என்ற கணக்கில் ஆட்டத்தை சமன்படுத்தினார்.
First published: October 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்