ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அரசியல் சாசன முகவுரையை பின்பற்றுகிறேன், நீங்களும் படிங்க - அமித் மிஸ்ரா ட்வீட்டுக்கு இர்பான் பதான் கவுண்டர்

அரசியல் சாசன முகவுரையை பின்பற்றுகிறேன், நீங்களும் படிங்க - அமித் மிஸ்ரா ட்வீட்டுக்கு இர்பான் பதான் கவுண்டர்

நாட்டின் அரசியல் சாசன முகவுரையை தான் என்றும் பின்பற்றுவதாகவும், குடிமக்கள் அனைவரும் இதை படித்து பின்பற்ற வேண்டும் எனவும் இர்பான் பதான் ட்வீட் செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர்களான இர்பான் பதான் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் ட்விட்டரில் காரசாரமாக விவாதித்துக் கொண்டு வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இப்ரான் பதான் நேற்று காலை தனது ட்விட்டர் பதிவில் " எனது நாடு, மிக அழகான நாடு, உலகின் தலை சிறந்த நாடாக உருவாகும் திறன் படைத்தது. ஆனால்... " என்று தெரிவித்திருந்தார்.

  இப்ரான் பதானின் இந்த ட்வீட் விவாதத்தை கிளப்பிய நிலையில், இதற்கு பதில் தரும் விதமாக இந்திய அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ட்வீட் செய்தார். அமித் மிஸ்ரா தனது ட்வீட்டில், எனது நாடு, மிக அழகான நாடு, உலகின் தலை சிறந்த நாடாக உருவாகும் திறன் படைத்தது. அப்படி மாற வேண்டுமென்றால் சிலர் இந்திய அரசியல் சட்டமே தாங்கள் பின்பற்ற வேண்டிய முதல் நூல் என்பதை உணர வேண்டும்" என பதில் கொடுத்திருந்தார்.

  இதையும் படிங்க: விதிமுறை மீறி மோசமானசெயல்பாடு.. ரிஷப் பந்திற்கு ரூ.1.15 கோடி அபராதம்

  அமித் மிஸ்ரா பதில் அளித்தது விவகாரத்தை மேலும் வைராலக்கிய நிலையில், இன்று இப்ரான் பதான் தனது ட்விட்டரில் அமித் மிர்ஸாவுக்கு பதில் அளிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார். இர்பான் தனது ட்வீட்டில், "இந்திய அரசியல் சாசன முகவுரையின் படத்தை பகிரந்து, நான் இதை எப்போதும் பின்பற்றுகிறேன். இந்த அழகான நாட்டை சேர்ந்த அனைத்து குடிமக்களும் இதை படித்து பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். படியுங்கள், மீண்டும் மீண்டும் படியுங்கள்" என ட்வீட் செய்துள்ளார்.

  நாட்டில் சமீப காலமாக மத மோதல்கள் தலைத்தூக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக அனுமன் ஜெயந்தி, ராம நவமி விழா ஊர்வலங்களில் நாட்டில் மத மோதல் வெடித்த நிலையில், இது தொடர்பாகவே இர்பான் பதான் தனது ட்வீட்டை பூடகமாக பதிவிட்டிருப்பார் எனவும், இதற்கு அமித் மிர்ஸா தனது பார்வையில் பதில் ட்வீட் செய்துள்ளார் எனவும் கருதப்படுகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Irfan Pathan