திங்களன்று துபாய் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் வென்றது, ஆனால் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்று கேப்டன் தோனியின் மகள் ஜிவா வேண்டிக்கொள்ளும் காட்சி அமைந்த புகைப்படம் ஒன்று நெட்டிசன்களின் நெகிழ்ச்சித் தருணமாகியுள்ளது.
இணையதளத்தின் மிகவும் கியூட் பிக்சர் என்ற பெயரை இந்தப் புகைப்படம் தட்டிச் சென்றது. இந்த மேட்சின் போது சாக்ஷி தோனி மகள் ஜிவா ஸ்டாண்ட்ஸில் அமர்ந்திருந்தனர். டெல்லி அணிக்கு 3 ஓவர்களில் 28 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற தருணத்தில் தோனி மகள் ஜிவா கையைக் கூப்பி தன் தந்தையின் அணி வெற்றி பெற வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தது வைரல் புகைப்படமாகியுள்ளது. ஆனால் ஆட்டம் தந்தை தோனிக்கு சாதகமாக இல்லை, தோல்வி தழுவியது.
ஆனால் பிஞ்சு உள்ளத்தின் இன்னொசண்டான அந்த வேண்டுதல் நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது. ஜிவா வேண்டிக்கொள்ளும் இந்தப் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்து தள்ளுகின்றனர். கடைசியில் ஷர்துல் தாக்கூர் அட்டகாசமாக வீசி சென்னைக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கினார், ஆனால் டிவைன் பிராவோவை கரீபியன் பிரீமியர் லீகில் ஆடி ஆடி பழக்கப்பட்ட ஷிம்ரன் ஹெட்மையர் அவர் எங்கெல்லாம் வீசுவார் என்பதை கச்சிதமாகக் கணித்து வெற்றி பெறச் செய்தார்.
தோனி தோற்றாலும் அவரின் மகளின் புகைப்படம் நேற்று ரசிக நெஞ்சங்களை உருக்கிவிட்டது, நெகிழ்ச்சி உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டது என்றே கூற வேண்டும்.
ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.