யுவராஜ் சிங்கிற்கு இது தேவையா?- அஸ்வினை மறைமுகமாக சீண்டல்!
யுவராஜ் சிங்கிற்கு இது தேவையா?- அஸ்வினை மறைமுகமாக சீண்டல்!
யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்கின் ட்வீட் வைரலாகி வருகிறது. ஆனால் அவர் தவறான அணுகுமுறை ஒன்றை நல்ல அணுகுமுறையுடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக வைரலாகி வருகிறது. முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் ஜோஸ் பட்லரை ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டை நிலைநிறுத்தியதற்காக பாராட்டினார் யுவராஜ்,
யுவராஜ் சிங்கின் ட்வீட் வைரலாகி வருகிறது. ஆனால் அவர் தவறான அணுகுமுறை ஒன்றை நல்ல அணுகுமுறையுடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக வைரலாகி வருகிறது. முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் ஜோஸ் பட்லரை ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டை நிலைநிறுத்தியதற்காக பாராட்டினார் யுவராஜ், ஆனால் ட்வீட்டின் கடைசி பகுதி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவரது, பட்லர் அணியில் ஆடும் 'அவரது அணி வீரர்கள் சிலர் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்' என்று சீண்டியுள்ளார். இது வேறு யாருமல்ல, மன்கடிங் செய்த அஸ்வினைத்தான் யுவராஜ் மறைமுகமாக சாடுகிறார். .
குஜராத் டைட்டன்ஸ் இன்னிங்ஸின் 12வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது ஜிம்மி நீஷம் வீசிய பந்தை ஹர்திக் பாண்டியா அடித்தார். பட்லர் தனது முழு முயற்சியையும் இட்டு பந்தை நிறுத்தியபோது பந்து கிட்டத்தட்ட எல்லையை எட்டியது, ஆனால் அவர் அதைத் திரும்ப வீசும்போது எல்லைக் கோட்டை நோக்கி அடியெடுத்து வைத்தார். முன்னதாக, பட்லர் அது பவுண்டரியா இல்லையா தனக்கு உறுதியாக தெரியவில்லை என்று ஒப்புக்கொண்டார், மேலும் அதை ரிவியூவுக்குக் கொண்டு செல்லும்படி நடுவரிடம் கேட்டார்.
இந்த நேர்மையைத்தான் ஸ்போர்டிங் ஸ்பிரிட் என்று யுவராஜ் விதந்தோதியுள்ளார், இதை மட்டும் பாராட்டியிருந்தால் நெட்டிசன்களுக்குக் கோபம் வந்திருக்காது, ஆனால் கூடவே அவர் அணியில் இருக்கும் அஸ்வின் தெரிந்து கொள்ளட்டும் என்பது போல் பெயரைக் குறிப்பிடாமல் மன்கடிங் சம்பவததை சுட்டிக்காட்டியது நெட்டிசன்கள் மத்தியில் யுவராஜ் சிங் மீது அதிருப்தியைப் வரவழைத்துள்ளது,
ரசிகர்களின் சில ட்வீட்கள் இதோ:
We still have gentleman in the game of cricket !!! @josbuttler 👏🏽 other players should learn from him specially team mates !!! #IPL2022#RRvGT
பட்லருக்கும் அஷ்வினுக்கும் இடையிலான முழு சம்பவமும் ஐபிஎல் 2019 இல் இருந்து தொடங்குகிறது. இந்த முழு விஷயமும் அந்த நேரத்தில் உலக கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மான்கேடிங் விவகாரம் என்று அறியப்பட்டது. யுவியின் ட்வீட், இந்திய ஆஃப் ஸ்பின்னரைப் பற்றிய ஒரு மறைமுகமான சாடல் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.