• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மீண்டும் ஐபிஎல் அணியில் யுவராஜ் சிங்?

மீண்டும் ஐபிஎல் அணியில் யுவராஜ் சிங்?

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

மக்களின் கோரிக்கை, ரசிகர்களின் வேண்டுகோள் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் மைதானம் வருவேன் என நம்புகிறேன்.

  • Share this:
    அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் மைதானம் வருவேன் என நம்புகிறேன் என்று யுவராஜ் சிங் கூறியிருப்பது 2 புதிய ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஓன்றில் வீரராக களமிறங்குகிறாரா பயிற்சியாளரகா களம் காண்கிறாரா என்ற புரியாத புதிரை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

    2011 உலகக்கோப்பை தொடர் நாயகன் யுவராஜ் சிங், பல போட்டிகளை இந்திய அணிக்கு வென்று கொடுத்த கங்குலியின் கண்டுப்பிடிப்பு யுவராஜ் சிங். இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகளில் 8,701 ரன்களும், 40 டெஸ்ட் போட்டிகளில் 1900 ரன்களும் சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 111 விக்கெட்டுகளையும் வீழ்த்திய யுவராஜ் சிங் 2000-ம் ஆண்டில் இந்திய அணிக்கு அறிமுகமாகி பல்வேறு வெற்றிகளைப் பெறக் காரணமாக இருந்தார்.

    2011 உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கடைசி நேரத்தில் யுவராஜ் சிங் அற்புதமான ஆட்டத்தை ஆடவில்லையென்றால், இந்திய அணியின் பயணம் அத்தோடு முடிந்திருக்கும். ஆனால் இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் யுவராஜ் சிங் களமிறங்க வேண்டிய இடத்தில் தோனி களமிறங்கி, அதுவரை எந்தப் போட்டியிலும் உருப்படியாக ஆடாத தோனி சரியாக காய் நகர்த்தி இறுதியில் யுவராஜ் சிங் இடத்தில் தான் இறங்கி தன் மதிப்பை உயர்த்திக் கொள்ள 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை பயன்படுத்திக் கொண்டார்.

    2007 உலகக்கோப்பையில் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராடை ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி கேரி சோபர்ஸ், ஹெர்ஷல் கிப்ஸுக்கு பிறகு சாதனையாளர் ஆனார். அப்போது முதலே ரசிகர்களின் உள்ளங்களை அள்ளியவர் யுவராஜ் சிங், இவரை தோனி நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். 2020-21ஆம் ஆண்டு சயத் முஷ்தாக் அலி கோப்பைப் போட்டியில் பஞ்சாப் அணியில் உத்தேச வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங் இடம் பெற்றபோதிலும் அவர் அதில் இடம் பெறவில்லை.

    இந்தச் சூழலில் நேற்று இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங் பதிவிட்ட கருத்து ரசிகர்களுக்கு சந்தோஷ அதிர்ச்சியோடு புரியாத புதிர்த்தன்மையையும் அளித்துள்ளது. அதாவது மீண்டும் இந்திய அணிக்கு வருவது கடினம், ஆனால் ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் வரவிருப்பதால் ஏதாவது ஒரு அணிக்கு யுவராஜ் சிங்கை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுத்த சிக்னல் வந்திருக்கலாம் என்று தெரிகிறது, எது எப்படியோ யுவராஜ் சிங் மீண்டும் வந்தால் அது ரசிகர்களுக்கு பெரிய குஷிதான்.

    இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங் கூறியது இதுதான், “

    மக்களின் கோரிக்கை, ரசிகர்களின் வேண்டுகோள் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் மைதானம் வருவேன் என நம்புகிறேன்.

    இந்த உணர்வைத் தவிர வேறேதும் இல்லை. உங்கள் அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. அதாவது என்னைப் பொறுத்தவரை அதற்கும் மேல். இந்திய அணியை ஆதரியுங்கள் அது நம்முடைய அணி. உண்மையான ரசிகர், ரசிகை கடினமான நேரத்தில் ஆதரவு தெரிவிப்பார்கள்”  என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: