• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அடுத்த சீசனில் சிஎஸ்கே ஜெர்ஸியில் என்னை பார்க்கலாம்... ஆனால்? ட்விட்ஸ்ட் கொடுத்த தோனி

அடுத்த சீசனில் சிஎஸ்கே ஜெர்ஸியில் என்னை பார்க்கலாம்... ஆனால்? ட்விட்ஸ்ட் கொடுத்த தோனி

தோனி

தோனி

ஐபிஎல் தொடரின் அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவேனா என எனக்கு தெரியாது என்று மகேந்திர சிங் தோனி ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.

  • Share this:
    ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு ஆரம்பித்தது முதலே சிஎஸ்கே அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் தோனியின் கேப்டன்ஷிப் தான் காரணமாக இருந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

    வயது காரணமாக மகேந்திர சிங் தோனி தோனி நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவதைப் பார்க்கலாம். எனது கடைசி ஆட்டத்தை அங்கே விளையாடுவேன். ரசிகர்கள் எனது கடைசி ஆட்டத்தைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படித்தான் விடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று தோனி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று துபாயில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ்க்கு பின் பேசிய தோனி, அடுத்த சீசனில் என்னை நீங்கள் மஞ்சள் ஜெர்ஸியில் பார்க்கலாம். ஆனால், சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேனா என எனக்குத் தெரியாது. அடுத்த சீசனில் புதிதாக இரு அணிகள் வருகின்றன என்பதால், ஏராளமான நிச்சயமற்ற தன்மைகள் சுற்றி இருக்கின்றன. எந்த மாதிரியான தக்கவைப்புக் கொள்கை இருக்கும் என எங்களுக்குத் தெரியாது.

    Also Read : தோனியிடமிருந்து ஏன் பெரிய ரன்களை எதிர்பார்க்க முடியாது?- ஓர் அலசல்

    எத்தனை வெளிநாட்டு வீரர்களை, உள்நாட்டு வீரர்களைத் தக்கவைக்கப் போகிறார்கள் என எனக்குத் தெரியாது. விதிகள் நடைமுறைக்கு வராதவரை, தெரியாதவரை உங்களால் எதையும் முடிவு செய்ய முடியாது. என்ன நடக்கும் என்பதை பொறுமையாகப் பார்க்கலாம். அனைவரும் சிறப்பாக இருக்க வேண்டும் என நம்புவோம்“ என்றுள்ளார்.

    தோனியின் பேட்டிங் ஃபார்ம் கடந்த 2 ஐபிஎல் சீசன்களிலும் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரில் 28 இன்னிங்ஸில் தோனி ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்த சீசனில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி உள்ள தோனி 96 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக மட்டுமே தோனி இருந்து வருவதால் அடுத்த சீசனில் அவர் விளையாடுவாரா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: