முகப்பு /செய்தி /விளையாட்டு / டி20 உலகக்கோப்பை அணியில் ‘யார்க்கர்’ நடராஜன் அவசியம்- சுனில் கவாஸ்கர்

டி20 உலகக்கோப்பை அணியில் ‘யார்க்கர்’ நடராஜன் அவசியம்- சுனில் கவாஸ்கர்

நடராஜன்

நடராஜன்

இந்திய அணிக்காக ஒரே தொடரில் மூன்று வடிவத்திலும் ஆடி மிகச்சிறப்பாக, அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்படுவதென்பதெல்லாம் சாதாரண காரியமல்ல, ஆனால் பிரமாதமாக ஆடி சிறப்பாக வந்த தமிழ்நாட்டின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் உலகக்கோப்பை டி20 இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய அணிக்காக ஒரே தொடரில் மூன்று வடிவத்திலும் ஆடி மிகச்சிறப்பாக, அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்படுவதென்பதெல்லாம் சாதாரண காரியமல்ல, ஆனால் பிரமாதமாக ஆடி சிறப்பாக வந்த தமிழ்நாட்டின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் உலகக்கோப்பை டி20 இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் வீசும் விதம் பெரிய அளவில் முதிர்ச்சியைக் காட்டியுள்ளது, கிராஸ் சீம் பவுலிங், நக்கிள் பால், ஸ்லோயர் ஒன் என்று யார்க்கர் ஆயுதத்துடன் வேறு சில ஆயுதங்களையும் தன் பட்டியில் சேர்த்துள்ளார் டி.நடராஜன், அன்று ஆர்சிபி அணியை நசுக்கிய போது இவர் 3 விக்கெட், யான்சென் 3 விக்கெட். பெரிய வெற்றியை ஆர்சிபி பெற்றது.

இந்நிலையில் பர்ப்பிள் தொப்பி வைத்திருக்கும் செஹலை முந்த் இன்னும் ஒரு போட்டி போதும் என்ற நிலையில் சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

காயத்தில் இருந்து மீண்டு ஐ.பி.எல்.லில் ஆடி வரும் நடராஜனின் பந்து வீச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவர் யார்கர் ஸ்பெஷலிஸ்ட் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அவர் இப்போது பல விதமான பந்த்களையும் வீசுகிறார். காயத்தால் அவரை இந்திய அணி இழந்து இருந்தது. அவர் மீண்டும் தேர்வுப் போட்டி களத்தில் இருப்பார். 16 முதல் 20 ஓவர்கள் வரை பந்து வீசுவதில் அவர் சிறப்பாக செயல்படுகிறார்.

நடராஜன் கண்டிப்பாக இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார். ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் இடம் பெறுவதை அவர் நோக்கமாக கொண்டுள்ளார்.

இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.

First published:

Tags: Cricketer natarajan, IPL 2022, T natarajan