Home /News /sports /

Year Ender 2021: 2021-ல் கிரிக்கெட்டை உலுக்கிய சர்ச்சைகள்

Year Ender 2021: 2021-ல் கிரிக்கெட்டை உலுக்கிய சர்ச்சைகள்

2021-ன் கிரிக்கெட் சர்ச்சைகள்.

2021-ன் கிரிக்கெட் சர்ச்சைகள்.

டி20 கேப்டன்சி பொறுப்பை தானாகவே ராஜினாமா செய்த விராட் கோலி, ஒருநாள் கேப்டன்சி பதவியை விட்டு விலக 48 மணி நேரம் அவகாசம் அளித்தும் அவர் விலகாததால் பிசிசிஐ அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி ரோகித் சர்மாவை கேப்டனாக்கியது, அந்த சர்ச்சை இன்னும் கூட ஓய்ந்தபாடில்லை.

மேலும் படிக்கவும் ...
  கிரிக்கெட்டும் சர்ச்சைகளும் உடன்பிறவா சகோதரர்களே. அதுவும் 2021 கோவிட் பாதிப்பினால் பயோபபுள் என்ற புதிய நடைமுறை கிரிக்கெட்டில் ஆட்சி செலுத்த பலரும் இது குறித்து கடும் விமர்சனங்களை எழுப்ப 2021 கிரிக்கெட் சர்ச்சைகள் நிறைந்த ஆண்டாகத் திகழ்கிறது.

  இதோ  2021-ன் சில பிரதான கிரிக்கெட் சர்ச்சைகள்:

  தென் ஆப்பிரிக்கா தொடரை ரத்து செய்த ஆஸ்திரேலியா:

  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு அடி வாங்கும் என்று தெரிந்தே ஆஸ்திரேலியா கொரோனா வைரஸ் பிரச்சனையினால் தென் ஆப்பிரிக்கா தொடரை ரத்து செய்தது. இப்போது போலவே அப்போதும் தென் ஆப்பிரிக்காவை டெல்டா வைரஸ் உலுக்கி வந்தது, இப்போது ஓமைக்ரான், அப்போது டெல்டா, இந்தியாவையும் டெல்டா உலுக்கி நிலைகுலையச் செய்த மறக்கப்பட வேண்டிய துயர நாட்கள்.

  இந்தத் தொடரை ரத்து செய்ததனால் ஏற்கெனவே நிதிநெருக்கடியில் தத்தளித்த தென் ஆப்பிரிக்கா வாரியம் மேலும் சிக்கலுக்குள் தள்ளப்பட்டது. தொலைக்காட்சி உரிமைகள் வருவாய் மட்டும் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்டது. மொத்தமாக தொடரை ரத்து செய்ததனால் 2.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவுக்கு நஷ்டமானது.

  ஐபிஎல் 2021 பயோ பபுளில் கொரோனா தொற்று:

  2021ம் ஆண்டின் கிரிக்கெட் சர்ச்சைகளின் மையம் கொரோனா வைரஸ் பரவலாகவே இருந்தது. யுஏஇயில் 2020 ஐபிஎல் தொடரை வெற்றி கரமாக நடத்திய பின்பு, இந்தியாவில் நடத்த 2021 ஐபிஎல்-ஐ முடிவு செய்தது பிசிசிஐ. ஆனால் பயோபபுள் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு சிஎஸ்கே, கொல்கத்தா, ஹைதராபாத் அணி வீரர்கள் உதவிப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து பாதியிலேயே நிறுத்தப்பட்டு பிறகு செப்டம்பரில் யுஏஇயில் நடத்தப்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது.

  பெண்கள் விளையாட்டைத் தடை செய்த தாலிபான்கள்:

  ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர். இது ஆப்கானிஸ்தானை பல விதங்களில் புரட்டிப் போட்டது. ஆட்சியைப் பிடித்தவுடன் இந்தியன் பிரீமியர் லீகில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆடுவதைக் காரணம் காட்டி ஆப்கானில் ஐபிஎல் பார்க்க தடை விதித்தது. மேலும் பெண்கள் விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதையும் தாலிபான்கள் தடை செய்தனர்.

  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பிரச்சனை:

  செப்டம்பர் 13ம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மனாக ரமீஸ் ராஜா தேர்வு செய்யப்பட்டார். அது பல சர்ச்சைகளைக் கிளப்பியது. ரமீஸ் ராஜாவை நியமித்ததையடுத்து பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ் விலகினர். ஆனால் ரமீஸ் ராஜாவினால் விலகியதாக இருவரும் கூறவில்லை.

  யார்க்‌ஷயர் கிரிக்கெட்டில் நிறவெறி:

  முன்னாள் யார்க் ஷயர் வீரர் அஜீம் ரஃபீக் யார்க் ஷயர் அணியில் கடுமையான நிறவெறி இருப்பதாகவும் ஆசியர்களை குறிவைத்து கேலியும் கிண்டலும் செய்வதாகவும் குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார். இதனை எதிர்த்து அதிகாரப்பூர்வ புகாரையும் ரஃபீக் எழுப்பினார். முஸ்லிம் வீரர்களை பாகிஸ்தானி என்று கூறி அவதூறாகப் பேசுவதும் இந்திய வீரர் புஜாராவையும் அவர்கள் கேலி செய்தனர், ஆனால் புஜாராவுக்கு அது புரியவில்லை என்று அசீம் ரபீக் தெரிவித்தார்.

  முன்னாள் கேப்டனும் இப்போதைய கருத்து கந்தசாமியுமான மைக்கேல் வான், ‘ஆசிய வீரர்கள் மிக அதிகம்தான், இதற்கு ஒரு வழி பண்ணுவோம்’என்று நிறவெறித்தனத்தை காட்டியதாகவும் சர்ச்சைகள் பிறந்தன.

  டிம் பெய்ன் பாலியல் முறைகேடு விவகாரம்:

  ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முன்பு ஒருமுறை சக பெண் ஊழியருடன் முறைதவறிய விதத்தில் உரையாடல் மேற்கொண்டதையும் தன் அரைநிர்வாணப்புகைப்படத்தை அனுப்பியும், தனது அந்தரங்க உறுப்பை மட்டும் புகைப்படம் எடுத்து அனுப்பி பாலியல் டார்ச்சர் கொடுத்ததும் அம்பலமாக கேப்டன் பதவியிலிருந்து விலகினார், ஆஷஸ் தொடரிலேயே அவர் இல்லை.

  கோலியை இந்திய ஒருநாள் அணிக் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது:

  டி20 கேப்டன்சி பொறுப்பை தானாகவே ராஜினாமா செய்த விராட் கோலி, ஒருநாள் கேப்டன்சி பதவியை விட்டு விலக 48 மணி நேரம் அவகாசம் அளித்தும் அவர் விலகாததால் பிசிசிஐ அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி ரோகித் சர்மாவை கேப்டனாக்கியது, அந்த சர்ச்சை இன்னும் கூட ஓய்ந்தபாடில்லை.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Captain Virat Kohli, YearEnder 2021

  அடுத்த செய்தி