முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL DCW vs UPW : மெக் லேனிங் அதிரடி அரைச்சதம்… டெல்லி கேபிடல்ஸ் 211 ரன்கள் குவிப்பு

WPL DCW vs UPW : மெக் லேனிங் அதிரடி அரைச்சதம்… டெல்லி கேபிடல்ஸ் 211 ரன்கள் குவிப்பு

அரைச்சதம் விளாசிய மெக் லேனிங்

அரைச்சதம் விளாசிய மெக் லேனிங்

கடைசி நேரத்தில் ஜெமிமா ரோட்ரிகஸ் – ஜோனசன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் கடைசி விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் மெக் லேனிங் அதிரடி அரைச்சதம் விளாசியுள்ளார். உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 211 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மெக் லேனிங் மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 6.3 ஓவரில் அணி 67 ரன்கள் எடுத்திருந்தபோது ஷபாலி வர்மா 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மேரிஸன் கேப் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைச்சதம் எடுத்த கேப்டன் மெக் லேனிங் 42 பந்தில் 3 சிக்சர் 10 பவுண்டரியுடன் 70 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடைசி நேரத்தில் ஜெமிமா ரோட்ரிகஸ் – ஜோனசன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் கடைசி விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப அமைத்தனர். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 211 ரன்கள் குவித்தது. ரோட்ரிகஸ் 34 ரன்னும், ஜோனசன் 42 ரன்னும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர். இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி உ.பி. வாரியர்ஸ் அணியி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

First published:

Tags: Cricket, WIPL