முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL 2023 : உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றி பெற 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத்!!

WPL 2023 : உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றி பெற 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத்!!

பந்தை பவுண்டரிக்கு விளாசும் குஜராத் அணியின் ஹர்லீன் தியோல்

பந்தை பவுண்டரிக்கு விளாசும் குஜராத் அணியின் ஹர்லீன் தியோல்

நேற்று குஜராத் அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற அந்த அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றிபெறுவதற்கு 170 ரன்களை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 3 ஆவது லீக் போட்டியாக குஜராத் – உ.பி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மும்பை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி படுதோல்வியை சந்தித்திருந்தது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸை வென்ற குஜராத் அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.

காயம் காரணமாக குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஸ்னே ரானா கேப்டனாக செயல்பட்டார். ஓபனிங் பேட்டர்கள் மேகனா 24 ரன்னும், சோபியா டுங்ளே 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க, ஹர்லீன் தியோல் அதிரடியாக விளையாடி 32 பந்தில் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்தவர்களில் ஆஷ்லே கார்டனர் 25 ரன்னும், தயாளன் ஹேமலதா 21 ரன்னும் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 169 ரன்கள் எடுத்தது. உ.பி. வாரியர்ஸ் அணியில் தீப்தி ஷர்மா,சோபி எக்லஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி உ.பி. வாரியர்ஸ் அணியின் பேட்டர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். நேற்று குஜராத் அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற அந்த அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: WIPL