மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை (WIPL) ஒளிபரப்பும் உரிமையை வயாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு முதல் மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரையும் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை பிசிசிஐ அறிவிக்கவுள்ளது.
இந்நிலையில் முதற்கட்டமாக போட்டியை ஒளிபரப்பு செய்யும் உரிமைக்கான ஏலம் நடைபெற்ற நிலையில் அதனை வயாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது. நடப்பாண்டில் தொடங்கும் சீசன் முதல் 5 சீசனுக்கான போட்டிகளை வயாகாம் 18 நிறுவனம் ஒளிபரப்பு செய்து கொள்ளும். இதற்காக ரூ. 951 கோடி ரூபாய் செலுத்தி வயாகாம்18 நிறுவனம் உரிமத்தை பெற்றுள்ளது. இந்த வகையில் ஒரு போட்டிக்கு மட்டும் ஒளிபரப்பு உரிமத்தை பெறுவதற்காக வயாகாம் 18 நிறுவனம் ரூ.7.09 கோடிகளை அளித்துள்ளது.
வயாகாம் 18 நிறுவனத்திற்கு ஒளிபரப்பு உரிமத்தை அளித்துள்ள தகவலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நாளுக்கு நாள் பிரபலம் அடைந்து வருவதால், மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவது தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒளிபரப்பு ஏலத்தை வெற்றிகரமாக முடித்த பிசிசிஐ நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில், ‘மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை வென்றுள்ள வயாகாம்18 நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்.
சஞ்சு சாம்சன் என் இதயத்தில் இருக்கிறார்.. - சூர்யகுமார் யாதவின் பதிலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி
பிசிசிஐ மீது வயாகாம் 18 நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. மிகப்பெரும் தொகைக்கு இந்த நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ளது. மகளிர் கிரிக்கெட்டை பொருத்தளவில் இது மிகப்பெரிய விஷயம்’ என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket