2021 ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவாரா? - கூகுளில் தேடிய சிஎஸ்கே ரசிகர்கள்!

தோனி

இதுதான் உங்களின் கடைசி போட்டியா என்று கேட்ட கமண்டர் டேனி மோரிசனிற்கு பதிலளித்த தோனி, நிச்சயமாக இல்லை என்றார். இது குறித்து தோனியின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் #Definitely Not! என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 • Share this:
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் செல்ல முடியாது என்பது ஏற்கனவே உறுதியாகியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில், இந்த சீசனின் கடைசி போட்டியை கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் எதிர்கொண்டு வெற்றி பெற்றது.

  இந்த சூழலில் தோனி 2021 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களால் சமூக வலைதளத்தில் ஒலிக்கத் தொடங்கியது. இதற்கு முன்பு 3 முறை கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே, இந்தாண்டு ஐபிஎல் சீசனில் தெளிவுற தோற்றமளிக்க முடியாமல் பாயிண்ட் டேபிளில் பின்தங்கியது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  ALSO READ |  Bigg Boss Tamil 4 | பிக்பாஸில் இருந்து வெளியேறிய வேல்முருகன்.. அடுத்த டார்கெட்டில் ஆரி, அர்ச்சனா..

  கடைசி போட்டிகளில் சிஎஸ்கே சில வெற்றிகளைப் பெற முடிந்தது, மற்ற அணிகளுக்கு சரியான பதிலடி கொடுத்து பிளே ஆஃப் செல்வதை தடுத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, அடுத்த ஆண்டு விளையாடுவாரா? என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.

  இது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் கூகுளில் சென்று இது தோனியின்  கடைசி போட்டியா? தோனி 2021 ஐபிஎல்லில் விளையாடுவாரா? என தேடத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சி.எஸ்.கே போட்டியின் டாஸின் போது, இதுதான் உங்களின் கடைசி போட்டியா என்று கேட்ட கமண்டர் டேனி மோரிசனிற்கு பதிலளித்த தோனி, நிச்சயமாக இல்லை என்றார். ஆகையால் தோனி நிச்சயமாக 2021ம் ஆண்டு ஐ.பி.எல்லில் விளையாடுவார் என்ற நல்ல செய்தியை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

   

     மேலும் தோனியின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் #Definitely Not!  என்ற ஹாஸ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.

   

      

      

      

      

      

      

      

      

      

      

  ஐபிஎல் 2020ல் இளைய வீரர்களுக்கு இடம் கொடுக்காமல் மூத்த வீரர்களை தொடர்ந்து ஆதரிப்பதற்காக தோனி அதீத  விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.  அதனால் அவர் அடுத்த ஆண்டில் இளைய வீரர்களை வைத்து விளையாட
  தயாராக உள்ளார்.

  இந்தாண்டு ஐ.பி.எல்லில் வருத்தப்படும் விஷயமாக, சி.எஸ்.கேவின் கேப்டன் 12 இன்னிங்ஸ்களில் வெறும் 200 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.  ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: