Home /News /sports /

மீண்டும் மகுடம் சூடும் தோனி.. சிஎஸ்கேவை தோல்வியில் இருந்து மிட்டெடுப்பாரா?

மீண்டும் மகுடம் சூடும் தோனி.. சிஎஸ்கேவை தோல்வியில் இருந்து மிட்டெடுப்பாரா?

எம்.எஸ்.டோனி

எம்.எஸ்.டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய நிலை எட்டு போட்டிகளில் விளையாடி MS Dhoni: இரண்டு வெற்றிகளை மட்டும் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இனி வரக் கூடிய 6 போட்டிகளிலும் இமாலய வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் கனவு சாத்தியமாகும்.

மேலும் படிக்கவும் ...
    சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்மியின் கேப்டனாக மீண்டும் மகுடம் சூடியிருக்கிறார்  எம்.எஸ்தோனி.  இதையடுத்து சி.எஸ்.கே அணியை தொடர் தோல்வியில் இருந்து மீட்டெடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் செல்வாரா தோனி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் கொண்டாட்டத்தில் தோனியை இனி கேப்டனாக பார்க்க முடியாது என துவண்டு போயிருந்த சி.எஸ்.கே ரசிகர்களுக்கு, அவர் மீண்டும் மகுடம் சூடுகிறார் என்ற செய்தி ஆனந்தத்தில் கூத்தாட வைத்துள்ளது. இழந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுத்துள்ளது.

    நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சி.எஸ்.கே ஆர்மி புதிய கேப்டன் ஜடேஜா தலைமையில் களம் கண்டது. ஐபிஎல் போட்டி ஆரம்ப காலத்திலிருந்து சென்னை அணியின் நிரந்திர கேப்டனாக தோனியை பார்த்த ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தாலும் அணியின் நலன் கருதி ஏற்றுக் கொண்டனர்.

    ஆனால் கிடைத்த வாய்ப்பை ஜடேஜா சரியாக பயன்படுத்தவில்லை, தொடர் தோல்வி ஒருபுறம் இருந்தாலும் ஃபீல்டிங்கில் ஜடேஜா கேட்ச் விடுவதையெல்லாம் பார்க்கும் போது இது நம்ம ஜடேஜா இல்ல என்று ரசிகர்கள் கதறும் அளவிற்கு அவரது ஃபார்ம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மீண்டும் சி.எஸ்.கே. கேப்டனாக பொறுப்பேற்கிறார் தோனி... ஜடேஜா ராஜினாமா அறிவிப்பு


    எட்டு போட்டிகளில் 112 ரன்களுடன் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். கேப்டன்ஷிப் அழுத்தம் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் ஜடேஜாவையும் அசைத்துப் பார்த்து விட்டது. இதனால் தன்னுடைய கேப்டன்ஷிப் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்து விட்டு தலைக்கு மேல் தொங்க் கொண்டிருந்த கத்தியை கீழே இறக்கி வைத்துள்ளார் ஜடேஜா.

     

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய நிலை எட்டு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டும் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இனி வரக் கூடிய 6 போட்டிகளிலும் இமாலய வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் கனவு சாத்தியமாகும்.

    மேலும் படிக்க: ஆசிய சாம்பியன் பாட்மிண்டன்: நேர விரயத்துக்காக புள்ளியை இழந்த பி.வி.சிந்து அரையிறுதியில் தோல்வி: வெண்கலம் வென்றார்


     

    இதெல்லாம் நடக்குற காரியமா என கேட்பவர்களுக்கு நடக்காததையும் நடத்தி காண்பிப்பவர்தான் தோனி என சி.எஸ்.கே. ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chennai Super Kings, CSK, IPL 2022, MS Dhoni

    அடுத்த செய்தி