• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐபிஎல் சூதாட்டம் பற்றி ஸ்ரீசாந்த் மனம் திறப்பு- 10 லட்ச ரூபாய்க்காக நான் ஏன் ஃபிராடு செய்ய வேண்டும்?

ஐபிஎல் சூதாட்டம் பற்றி ஸ்ரீசாந்த் மனம் திறப்பு- 10 லட்ச ரூபாய்க்காக நான் ஏன் ஃபிராடு செய்ய வேண்டும்?

ஸ்ரீசாந்த்

ஸ்ரீசாந்த்

2013 ஐபிஎல் தொடரில் மோசடி நடந்ததையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தடைசெய்யப்பட்டார். இவருடன் ராஜஸ்தான் ராயல்ஸின் பிற 2 வீரர்களும் தடை செய்யப்பட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடைசெய்யப்பட்டன.

  • Share this:
    2013 ஐபிஎல் தொடரில் மோசடி நடந்ததையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தடைசெய்யப்பட்டார். இவருடன் ராஜஸ்தான் ராயல்ஸின் பிற 2 வீரர்களும் தடை செய்யப்பட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடைசெய்யப்பட்டன.

    இந்த ஐபிஎல் சூதாட்டத்துக்குப் பிறகு தடை செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் மீதான தடை சமீபத்தில் நீக்கப்பட்டு மீண்டும் கிரிக்கெட் ஆட அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் கீடா தளத்துக்கு ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில் ரூ.. 10 லட்சத்துக்காக நான் ஏன் அதைச் செய்யப்போகிறேன், இந்தியாவுக்காக ஆட வேண்டும் என்பதே லட்சியம் தென் ஆப்பிரிக்கா தொடர் இருந்தது, என் கவனம் அதன் மீதுதான் என்று தெரிவித்துள்ளார்.

    அவர் அளித்துள்ள பேட்டியில், “அந்த விவகாரம் குறித்து நான் பகிரும் அல்லது விளக்கமளிக்கும் ஒரே பேட்டி இதுதான். ஒரு ஓவர் 14 ரன்கள் தேவை என்ற நிலை. நான் 4 பந்துகள் வீசி 5 ரன்கள் கொடுத்தேன். நோ-பால் போடவில்லை, வைடும் போடவில்லை, ஒரு பந்து கூட ஸ்லோ பந்தும் வீசவில்லை. என் காலில் 12 அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் மணிக்கு 130 கிமீ வேகத்துக்கு மேல் வீசினேன்.

    நான் இரானி கோப்பையில் ஆடினேன், தென் ஆப்பிரிக்கா தொடரை எதிர்நோக்கியிருந்தேன். என் லட்சியமே அந்த தென் ஆப்பிரிக்கா தொடரில் ஆட வேண்டும் என்பதே. இப்படி நினைத்த நான் ஏன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கெடுத்துக் கொள்ள வேண்டும்? அதுவும் ஒரு 10 லட்ச ரூபாய்க்காக. நான் பார்ட்டிக்குச் சென்றால் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்பவன். நான் ஏதோ பெரிதாக சொல்லிக் கொள்ளவில்லை.

    நான் எப்போதும் என் கார்டு மூலம் தான் பணம் செலுத்துவேன், ரொக்கம் கிடையாது. என்னிடம் பணம் இருந்தால் நான் செலவழித்து விடுவேன். நான் என் வாழ்நாளில் பலருக்கும் உதவியிருக்கிறேன், அடுத்தவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் நான். நான் பலருக்கு உதவியிருப்பதால் அவர்களின் பிரார்த்தனைதான் என்னைக் காப்பாற்றியிருக்கிறது.

    2 பந்து 5 ரன்கள்தான். நான் எப்படி விட்டுக் கொடுப்பேன். சான்ஸே இல்லை” என்றார். தடை நீக்கப்பட்ட பிறகு சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஆடினார் ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக 2005-ல் அறிமுகமானார் ஸ்ரீசாந்த். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி அது. 2007 டி20 உலகக்கோப்பை இறுதியில் மிஸ்பா உல் ஹக் கொடுத்த கேட்சை ஸ்ரீசாந்த் எடுக்க இந்தியா கோப்பையை வென்றது. 2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இருந்தார் ஸ்ரீசாந்த்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: