• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஹர்திக், ரோஹித்திற்கு என்னாச்சு... பயிற்சியாளர் பதிலால் ரசிகர்கள் கவலை

ஹர்திக், ரோஹித்திற்கு என்னாச்சு... பயிற்சியாளர் பதிலால் ரசிகர்கள் கவலை

ஹர்திக் பாண்டியா - ரோஹித் சர்மா

ஹர்திக் பாண்டியா - ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா அணியின் இல்லாத காரணத்தால் மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி ஆட்டக்காரர் பொல்லார்டு மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

  • Share this:
    சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஏன் விளையாடவில்லை என்று மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கமளித்துள்ளார். ரோஹித் சர்மா அணியில் இல்லாத காரணத்தால் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் பொல்லார்டு மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

    இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாமல் போனது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதுகுறித்து மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

    அதில் ஹர்திக் பாண்டியாவிற்கு பயிற்சியின் போது தசைபிடிப்பு ஏற்பட்டடது. லேசான தசைபிடிப்பு என்றாலும் உடனடியாக போட்டியில் விளையாடி தசைபிடிப்பு மேலும் அதிகரிக்க கூடாது என்பதால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனால் வரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடுவார்.

    ரோஹித் சர்மா தற்போது தான் இங்கிலாந்து அணி உடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்து ஐக்கிய அமீரகம் வந்துள்ளார். டி20 போட்டிக்கு அவர் மைண்ட் செட்டாகும் விதமாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்றுள்ளார். ஆனாலும் அடுத்தப் போட்டியில் இவர்கள் இருவரும் விளையாடுவார்களா என்று தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தால் மும்பை அணியின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

    PURPLE CAP:

    RESULT DATA:

    ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 2-வது பாதியின் முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியோடு சிஎஸ்கே மோதியது. போட்டி ஆரம்பித்த சில ஓவர்களில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. ஆனால் தொடக்க வீரர் ருதுராஜ் பின்வரிசையில் ஜடேஜா மற்றும் பிராவோ ஆகியோரின் அதிரடியால் சிஎஸ்கே அணி மும்பை கௌரவமான இலக்கை நிர்ணயத்தது. பவுலிங்கில் பிராவோ மற்றும் சாஹரின் அட்டாக்கில் மும்பை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்த வெற்றியின்  மூலம் 12 புள்ளிகளோடு சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: