நடப்பு ஐ.பி.எல் தொடரில் வீரர்கள் சிலர் இரட்டை தொப்பியுடன் மைதானத்தில் விளையாடும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அதற்கு பின் சுவாரஸ்யமான காரணம் இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்திய பின் விளையாட்டு போட்டிகள் மீண்டும் உலகம் முழுவதும் தொடங்கியது. ஆனால் வீரர்கள் விளையாடும் விதம் தற்போது மாறிவிட்டது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஐ.பி.எல் தொடரிலும் புதிய விதிமுறைகளால் சில நேரங்களில் மைதானங்களில் அசாதாரண காட்சிகள் காணப்படுகிறது. மைதானத்தில் வீரர்கள் சிலர் இரட்டை தொப்பியுடன் விளைாடுவதை நாம் பார்த்திருக்க முடியும். இதற்கு காரணம் ஐ.சி.சி கொண்டு வந்த புதிய விதிமுறை தான்.
மைதானத்தில் வீரர்கள் ஃபீல்டிங் நெறிமுறைகளின்படி வீரர்கள் தங்களது சொந்த பொருட்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் பயன்படுத்து சன்கிளாஸ், தொப்பி மற்றும் துண்டை போட்டி நடுவரிடம் ஒப்படைக்க கூடாது.
இந்த விதியின்படி வீரர்ள் தங்களது தொப்பி, சன்கிளாஸ், துண்டு ஆகியவற்றை போட்டி நடுவர்களிடம் ஒப்படைக்க முடியாது. ஆனால் பவுலிங்கின் போது பந்துவீச்சாளர் தொப்பியுடன் பந்துவீசுவது இயலாத ஒன்றாகும். இதனால் களத்தில் இருக்கும் தங்களது சக போட்டியாளர்களிடம் அவர்கள் இந்த தொப்பியை ஒப்படைக்கின்றனர்.
இதன் காரணமாகவே மைதானத்தில் வீரர்கள் சிலர் இரட்டை தொப்பிகளுடன் ஃபீல்டிங் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. போட்டியின் போது அதிக உடல் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் வீரர்களுக்கு அறிவுறத்தப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.