கடைசி ஓவரை பிராவோவிற்கு கொடுக்காமல் ஜடேஜாவிற்கு வழங்கியது ஏன்? தோனி பதில்

எம்.எஸ்.தோனி

IPL 2020 | CSKvsDC | டெல்லி அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. சி.எஸ்.கே அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா கடைசி ஓவரை வீசினார்.

 • Share this:
  டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை ஜடேஜாவிற்கு வழங்கியது ஏன் என்று சி.எஸ்.கே கேப்டன் தோனி விளக்கமளித்துள்ளார்.

  ஐ.பி.எல் தொடரின் 34-வது லீக் போட்டியில் சி.எஸ்.கே - டெல்லி அணிகள் மோதின. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  இதையடுத்து முதல் பேட்டிங்கை தொடங்கிய சி.எஸ்.கே அணி 20 ஓவர்கள் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  டெல்லி அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. சி.எஸ்.கே அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா கடைசி ஓவரை வீசினார். ஆனால் அக்ஷர் படேல் யாரும் எதிர்பாராத வகையில் 3 சிக்சர்கள் விளாசி டெல்லி அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தந்தார்.

  இந்த போட்டிக்கு பின் பேசிய சி.எஸ்.கே மகேந்திர சிங் தோனியிடம் கடைசி ஓவரை பிராவோவிற்கு கொடுக்காமல் ஜடேஜாவிற்கு வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, பிராவோ உடல் தகுதியுடன் இல்லை. களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்திற்கு வரவில்லை. இதன் காரணமாகவே ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

  ஷிகர் தவானின் விக்கெட் மிகவும் முக்கியமானது. அவருக்கு சில கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம். ஷிகர் தவான் எப்போதுமே நல்ல ஸ்டிரைக் ரேட்டை கொண்டு செல்வார். எனவே அவரது விக்கெட் மிக முக்கியமானது. இரண்டாவது இன்னிங்சில் பிட்ச்  பேட்ஸ்மேன்களுக்கு சிறிது ஏதுவாக இருந்தது. எப்படி இருந்தாலும் ஷிகர் தவான் சிறப்பாக பேட்டிங் செய்தார்“ என்றார்.  ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: