• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தீபக் சாகரின் காதலி ஜெயா பரத்வாஜ் - பிக் பாஸ் பிரபலத்தின் சகோதரி

தீபக் சாகரின் காதலி ஜெயா பரத்வாஜ் - பிக் பாஸ் பிரபலத்தின் சகோதரி

தீபக் சாஹர்- ஜெயா பரத்வாஜ்

தீபக் சாஹர்- ஜெயா பரத்வாஜ்

சென்னை- பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் வைத்து காதலிக்கு ரோஜாப் பூ கொடுத்து காதலை வெளிப்படுத்தினார் தீபக் சாஹர். அவர் பெயர் ஜெயா பரத்வாஜ், பிக் பாஸ் பிரபலத்தின் சகோதரி ஆவார்.

  • Share this:
    சென்னை அணியின் வேகப் பந்துவீச்சாளர் தீபக் பெவிலியனில் இருந்த தனது காதலிக்கு அனைவர் முன்பும் முட்டிப் போட்டு ரோஜாப் பூவைக் கொடுத்து காதலை வெளிப்படுத்தினார். ஜெயா பரத்வாஜும் யெஸ் சொன்னார். ரோஜாப் பூவை வாங்கி தீபக் சாஹரின் காதலை ஏற்றுக்கொண்டார்.

    இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சாஹர், ‘புகைப்படம் எல்லாவற்றையும் சொல்லிவிடும். உங்கள் அனைவரும் வாழ்த்தும் தேவை’ என்று பதிவிட்டுள்ளார். தீபக் சாஹர் காதலை வெளிப்படுத்தும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    பல ஊடகங்களின் தகவல்களின் படி இந்த ஜெயா பரத்வாஜ் பிக் பாஸ் புகழ் சித்தார்த் பரத்வாஜின் சகோதரி ஆவார். பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றுபவர் ஆவார் ஜெயா பரத்வாஜ். இவர் சாஹருடன் ஐபிஎல் 2021 யுஏஇ சுற்றுப் போட்டிகளுக்குச் சென்றார். தாயகம் திரும்பியதும் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிஎஸ்கே அணிக்கு ஆடி வரும் தீபக் சாஹர் இந்தியாவுக்காக தன் 2018-ல் இங்கிலாந்துக்கு எதிராக டி20-யில் அறிமுகமானார். இங்கிலாந்தில் பிரிஸ்டலில் அறிமுகப் போட்டியில் ஆடினார். அதிலிருந்து 5 ஒருநாள் சர்வதேசப் போட்டி 14 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடி வருகிறார் தீபக் சாஹர். இரு வடிவத்திலும் சேர்த்து 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Deepak Chahar (@deepak_chahar9)






    தீபக் சாகரின் கசின் ராகுல் சாகர் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு ஆடி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது மூத்த சகோதரி மால்தி சாஹர் ஒரு நடிகை மற்றும் மாடல் ஆவார்.

    Also Read: சிஎஸ்கே தோற்றாலும் சாஹர் ஹேப்பிதான்: மைதானத்தில் ப்ரோபோஸ் செய்து காதலியின் மனதை வென்ற தீபக்

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: