• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அதிகம் படித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?- கும்ப்ளே, ஸ்ரீநாத், திராவிட் அல்ல

அதிகம் படித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?- கும்ப்ளே, ஸ்ரீநாத், திராவிட் அல்ல

அவிஷ்கா சால்வி. பவுலர்

அவிஷ்கா சால்வி. பவுலர்

ஒரு சிலர் விளையாட்டுக்காக படிப்பிற்கு முழுக்கு போடுவார்கள், ஒரு சிலர் படிப்புக்காக விளையாட்டுக்கு டாட்டா காட்டி விடுவார்கள். ஆனால் சிலர் தங்கள் உயர் கல்வியை முடித்து விடுகின்றனர்.

  • Share this:
    இந்திய கிரிக்கெட் பெரிய உள்கட்டமைப்பு கொண்டதாயினும் நிறைய வீரர்கள் இருந்தாலும் ஒரு சிலருக்கே இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் சிறந்த வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் சீராக இடம்பெற்று ஒரு கரியர் வாய்க்கிறது. மற்ற சிலர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். திறமை இருந்தும் வாய்ப்பு கொடுக்கப் படாமல் ஒழிக்கப்படுவதும் உண்டு.

    ஒழிக்கப்பட்டவர்கள் பட்டியல் நீளம் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது அமோல் மஜும்தார், சுதாகர் ராவ், பங்கஜ் சிங், ரகுராம் பட், மும்பையின் லெக் ஸ்பின்னர் பத்மாகர் ஷிவால்கர், ஹைதராபாத் ஆஃப் ஸ்பின்னர் கன்வல்ஜித் சிங்.. இன்னும் எத்தனையோ பேர். கன்வல்ஜித் சிங் பந்துகள் முரளிதரனை விடவும் அதிகம் ஸ்பின் ஆகும் பந்துகள் என்பது வேறு கதை, அதே போல் ரஜீந்தர் கோயெல். ஆகச்சிறந்த பவுலர் டெஸ்ட் வாய்ப்பு கிடைக்காமல் ஒழிக்கப்பட்டார். அதே போல் கர்நாடகாவில் விஸ்வநாத், பிரிஜேஷ் படேல் காலத்தில் சுதாகர் ராவ் என்று ஒருவர் இருந்தார் பிரமாத பேட்ஸ்மென், ஆனால் டெஸ்ட் போட்டிகளை பார்த்ததில்லை. அசோக் மன்காட் இன்னொரு வீரர், ரஞ்சி கிங் ஆனால் டெஸ்ட் வாசனை பார்த்ததில்லை.

    இந்த வீரர்கள் பலதரப்பட்ட வர்க்க, சாதி, கல்விப்பின்னணி கொண்டவர்களாக இருப்பார்கள், கல்வித்தகுதியும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கல்வித்தகுதியுடன் தான் இருப்பார்கள்.

    ஒரு சிலர் விளையாட்டுக்காக படிப்பிற்கு முழுக்கு போடுவார்கள், ஒரு சிலர் படிப்புக்காக விளையாட்டுக்கு டாட்டா காட்டி விடுவார்கள். ஆனால் சிலர் தங்கள் உயர் கல்வியை முடித்து விடுகின்றனர். அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், ராகுல் திராவிட், அஸ்வின் இவர்கள் இந்தியாவுக்கு ஆடுவதற்கு முன்பே உயர் கல்வியை முடித்தவர்கள். இதில் சிலர் பொறியியல் பட்டதாரிகள் ஆவார்கள்.

    ஆனால் இவர்களை விடவும் படித்த ஒரு கிரிக்கெட் வீரரின் கிரிக்கெட் கரியர் வெகுவிரைவிலேயே முடிந்து போனது, இவர் ஒரு பவுலர், கிளென் மெக்ராவை மாடலாகக் கொண்டு அவரைப்போலவே ஓடி வந்து அவரைப்போலவே பவுலிங் பினிஷிங் கொண்டவர். இவர் அவிஷ்கா சால்வி என்ற வேகப்பந்து வீச்சாளர்தான். 2003-ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பவுலராக உள்ளே வந்து 4 ஒருநாள் போட்டிகளுடன் கரியர் முடிந்து போனது. மிகவும் அபாயகரமான காயம் இவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து வைத்தது. மும்பை அணியைச் சேர்ந்தவரான அவிஷ்கா சால்வி டெல்லி டேர் டெவில்ஸ் அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

    ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிகம் படித்தவர் இவரென்றால் பலரும் மூக்கின் மேல் விரல் வைப்பார்கள். அவிஷ்கா சால்வி ஆஸ்ட்ரோ பிசிக்ஸில் பி.எச்டி-முனைவர், பட்டம் பெற்றவர், அதாவது டாக்டர் பட்டம் பெற்றவர்.

    இது நிறைய பேருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: