Home /News /sports /

IPL 2022 - எது சீசனின் சிறந்த கேட்ச்?- அம்பதி ராயுடு கேட்சா? ராகுல் திரிபாதி கேட்சா?

IPL 2022 - எது சீசனின் சிறந்த கேட்ச்?- அம்பதி ராயுடு கேட்சா? ராகுல் திரிபாதி கேட்சா?

அம்பதி ராயுடுவின் அதியற்புத கேட்ச்

அம்பதி ராயுடுவின் அதியற்புத கேட்ச்

செவ்வாய் இரவு RCBக்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு சாம்பியனான CSK இறுதியாக நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதிலிருந்து வெற்றிக்குத் திரும்பியது. சிவம் துபே (95 ரன்) மற்றும் ராபின் உத்தப்பாவின் (50 பந்தில் 88) அபாரமான பேட்டிங்கிற்குப் பிறகு, இந்தப் போட்டியில் 36 வயதான அம்பதி ராயுடு அற்புதமான ஸ்டன்னிங் கேட்ச் ஒன்றைப் பிடித்தார். அவரது ரசிகர்கள் இந்த ஒரு கை ஸ்டன்னரைப் பார்த்து பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர் மற்றும் இதை 'கேட்ச் ஆஃப் தி சீசன்' என்று அழைக்கிறார்கள்.

மேலும் படிக்கவும் ...

    16வது ஓவரின் 4வது பந்தில் இந்த கேட்சை ராயுடு பிடித்தர். ழ் RCB 216 ரன்களைத் துரத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சில் ஆகாஷ் தீப் கொடுத்த கேட்சை ஒரு கையால் டைவ் அடித்து காற்றில் அப்படியே மிதந்து எடுத்த ராயுடு RCB-க்கு மேலும் கடினமாக்கினார். ஷார்ட் கவர் பகுதியில் நின்றிருந்த ராயுடு, பரபரப்பாக வலது பக்கம் டைவ் செய்து பந்தைப் பிடித்தார், அதியற்புதமான இந்தக் கேட்சைத்தான் கேட்ச் ஆஃப் த சீசன் என்று கூறிவருகின்றனர்.

    ராயுடு கேட்ச்

    மைதானத்தில் விழுந்த பிறகும் பந்தை கையிலிருந்து போக விடவில்லை ஹைதராபாத் கிரிக்கெட் வீரர். களத்தில் ராயுடுவின் விளையாட்டுத் திறமை சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் ஈர்த்தது.

    இது ஆகச்சிறந்த கேட்ச்தான் ஆனால் இதிலாவது பந்து கொஞ்சம் மெதுவாகவே வந்தது. இன்னொரு கேட்சை அன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ராகுல் திரிபாதி பிடித்தாரே அது இதைவிடவும் சிறந்த கேட்ச் என்று கூற வேண்டும். காரணம், அது ஷுப்மன் கில் அடித்த பவர்ஃபுல் ஷாட். பந்து பறக்கிறது, ஆனால் குறுக்காக ஒரு கை எம்பி டைவ் அடித்துப் பிடித்தது பயங்கர ஆச்சரியமான கேட்ச். இடது கை கேட்ச், இது மிகவும் கடினம், ஏனெனில் ராகுல் திரிபாதிக்கு இது வாகான கை கிடையாது, அவர் வலது கை வீரர்.

    ராகுல் திரிபாதி கேட்ச்

    எனவே ராகுல் திரிபாதி கேட்ச் தான் அம்பதி ராயுடு கேட்சை விட கடினம், அம்பதி ராயுடு டைவ் அடித்து பிடித்தது திகைப்பூட்டும் கேட்ச்தான் ஆனால் அது அவருக்கு வாகான வலது கையில் வந்தது. அதை அற்புதமாகப் பிடித்தார் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் கேட்ச் ஆஃப் த சீசன் என்றால் அது ராகுல் திரிபாதி கேட்ச் தான் ஏனெனில் பந்து வேகம் எடுக்கிறது, ட்ராவல் என்பார்களே அப்படிப் போன பந்து. பொதுவாக இப்படி போனால் ட்ரை பண்ண மாட்டார்கள். ஆனால் ராகுல் திரிபாதி இடது புறம் எம்பி தன்னை தாண்டி சென்று கொண்டிருக்கும் பந்தை அனாயசமாகப் பிடித்தார்,, ஆனால் ராயுடு கேட்ச் அவரது பார்வைக்குள் முழுமையாக இருந்தது.

    இந்த இரண்டு கேட்ச்களுமே சிறந்த கேட்ச்கள்தான், இனி வரும் மேட்ச்களில் இன்னும் சிலபல கேட்ச்களை நாம் பார்க்கக்கூடும்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ambati rayudu, CSK, IPL 2022

    அடுத்த செய்தி